மழை அளவை உணர்த்தும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை அளவை, கூடு கட்டி முன்கூட்டியே பறவை இனங்கள் உணர்த்தி வருகின்றன. அறிவியல் வளர்ந்த காலத்தில் அதை அலட்சியமாக நாம் நினைப்பதால், வெள்ள சேதங்களை கண்கூடாக கண்டு வருகிறோம்.

உலகில் 10 ஆயிரம் பறவை இனங்கள் இருந்தன. 1400 இனங்கள் அழிக்கப்பட்டு விட்டது. கடந்த 200 ஆண்டில் 300 பறவை இனங்கள் அழிந்துள்ளன. பருவநிலை மாற்றம், இரைக்காக வேட்டையாடப்படுதல் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாகும்.பொதுவாக பறவை இடம் பெயர்தல் என்பது குளிர் அதிகமாகும் போது வட துருவத்திலிருந்து தென் துருவத்தை நோக்கியும், பூமத்திய ரேகையை நோக்கியும் இருக்கும். இதற்கு ‘மைக்ரேஷன்’ என்று பெயர். 99 சதவீத பறவைகள் அசைவ விரும்பிகள்.

மழை பெய்யும் பகுதிகளில் மட்டுமே பூச்சியினங்கள் தோன்றும். அதனால், அதை நோக்கி அவற்றின் இடம் பெயர்வு இருக்கும். இடம் பெயர்ந்து வரும் பறவைகள் தொடர்ச்சியாக 30 மணி நேரம் 5 ஆயிரம் கி.மீ.,வரை பறக்க கூடியன.தமிழகத்தில் உள்ள 13 பறவைகள் சரணாலயங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பறவைகள் வரத்து இருந்தாலும், இமயமலை பகுதியிலிருந்து வருபவையே அதிகம். இப்பகுதியிலிருந்து வெண்கொக்கு, அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நீர்காகம், மஞ்சள் மூக்கு நாரை, கூழக்கிடா வருகின்றன. அவ்வாறு வரும் பறவைகள் கூடு கட்டி தங்கள் இனத்தை விருத்தி செய்கின்றன.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

பச்சை மரங்களை தேர்வு செய்து, மேகத்தின் நுகர்வையும், நீரோட்டத்தையும் அறிந்து அதற்கேற்ற வகையில் கூடு கட்டும்.

மரத்தின் கீழே கூடு கட்டினால், நடப்பு பருவத்தில் மழை குறைவு. உச்சியில் கட்டினால் மழை அதிகம் என்பது பறவை ஆர்வலர்களின் அசைக்க முடியாத கூற்று.பறவை, கூடு கட்டி இருக்க முடியாதவாறு வெள்ளம், நில நடுக்கம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே திரும்பி விடும். ஒலி அலைகளை உணரும் ஆற்றல் அவற்றுக்கு உள்ளது.

இந்த ஆண்டு திருப்புத்துார் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு வந்த பறவைகள் மரத்தின் உச்சியில் கூடு கட்டி, இந்த பருவத்தில் அதிக மழை பொழியும் என்பதை முன்கூட்டியே உணர்த்தியுள்ளன. பறவைகள் மூலம் தகவல்களை தெரிந்து கொண்ட மனிதன், அவற்றை அழித்ததால் தற்போது வானிலை ஆய்வு மையத்தை எதிர்நோக்கி, வெள்ளம் வந்த பின் மிதக்கிறான். மனித இனம் அழிந்தாலும், பறவைகள் வாழும். பறவைகள் அழிந்தால் மனிதன் வாழ முடியாது, என்கின்றனர் பறவைகள் ஆர்வலர்கள்!!

நன்றி: தினமலர்

இயற்கையின் ரமணன் பறவைகள் தானோ?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *