மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு

கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

  • கள்ளக்குறிச்சி பகுதி கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர்.
  • இவைகளை பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை கொண்ட ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் ஊடு பயிராக வளர்த்து வருகின்றனர்.
  • 10 மாத பயிரான மஞ்சள் செடிகளை விதைத்த மூன்றாவது மாதம் முதல் ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் நடுகின்றனர்.
  • இதன் மூலம் மஞ்சள் பயிரைத்தாக்கும் படைப்புழுவின் தொற்று முதலிலேயே ஆமணக்கு செடிகளின் இலைகள் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்கின்றனர்.
  • பூச்சி மருந்து தெளித்து இரு பயிர்களையும் விவசாயிகள் பாதுகாக்கின்றனர்.
  • 6 மாத பயிரான ஆமணக்கு செடிகள் மூலம் விளக்கெண்ணெய் தயாரிக்க உதவும் ஆமணக்கு கிடைக்கிறது.
  • ஊடுபயிராக ஒரு ஏக்கர் அளவில் நடப்படும் ஆமணக்கு செடிகள் மூலம் 200 கிலோ ஆமணக்கு கிடைக்கும்.
  • இதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நன்றி: தினமலர் 

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

ஈரமண்ணில் இளமஞ்சள் கிழங்கு! "மண்ணு மாதிரி இருக்கியே' என தப்பித் தவறி கூட யாரைய...
மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு... மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத...
மஞ்சள் பயிரில் அதிக மகசூல் தொழிற்நுட்பங்கள்... மஞ்சள் பயிரில் மகசூல் அதிகரிக்க தொழில் நுட்ப முறைக...
நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி... ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செல...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *