இயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவுரை

“விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற இயற்கை உரங்களை இட வேண்டும்.”  என்று வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.

  • விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவைப்படும் ரசாயன உரங்களை அளவாக இடவேண்டும்.
  • இயற்கையான தொழு உரம், பசுந்தாள் உரம், மற்றும் தழை உரங்களை போதியளவு இடவேண்டும்.
  • காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகிக்கும் உயிர் உரங்களை இட வேண்டும்.
  • பாசன நீர் பரிசோதனை செய்தும், உரிய நீர் மேலாண்மை முறைகளை கடைபிடித்து மண்வளத்தை பாதுகாத்தல் வேண்டும்.
  • படிகட்டு சாகுபடி, குறுக்குச் சாலர் உழவு செய்தல், மரங்களை நடவு செய்தல், வேர் பிடிப்பு மிக்க வெட்டிவேர், கற்றாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து மண் அரிமானத்தை தடுத்தல்
  • வடிகால் வசதியை சீராக்கி, மண் வகைக்கேற்ப பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை உரமனான அவுரி செடி விவசாய நிலங்களில் நெல்சாகுபடி செய்வதற்கு வசதியாக ம...
தசகாவ்யா தயாரிப்பு முறை தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு.இதில் பத்து வகையான ...
சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite... சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *