இயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம் தயாரிப்பது எப்படி?

இயற்கை வேளாண்மை விஞானி நம்மாழ்வார் கூறுகிறார்:  ” ஒரு சிறிய விவசாயி இரண்டு அல்லது மூன்று ஏகரில் விவசாயம் செய்து லாபம் செயபது என்பது மிகவும் கஷ்டமாகி விட்டது.

இதற்கு  மூலகாரணம், ரசாயன இடு பொருள்களின் விலைகள் தாறு மாறாக ஏறிவிட்டதே ஆகும். விவசாயம் சரியாக செய்தல், நிச்சயமாக லாபம் செய்ய முடியும். ஆனால் பல விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல், நிலங்களை விற்று விட்டு சென்று அவை வீட்டு நிலங்களாகும் அவலத்தை பார்க்கிறோம். இதற்கு பதில் தான் என்ன?”

நம்மாழ்வார் என்ன சொல்கிறார் என்று பார்போம்: “நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரசாயன உரம் மட்டுமே ரூ 3000 ஆகிறது. அதற்கு பதிலாக இயற்கை உரங்களையும் ஈடு பொருட்களையும பயன் படுத்தினால் ரூ 500 மட்டுமே ஆகும். இதனால் சுலபமாக ஒரு எகருக்கு  2500 மிச்ச படுத்தலாம் ” என்கிறார் அவர்.

இயற்கை ஈடு பொருள் ஒன்றுக்கு உதாரணமாக அவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தயாரித்துள்ள “முட்டை ரசம்” என்பதை எடுத்து காட்டாக சொல்கிறார்.

முட்டை ரசம் தயாரிக்கும் முறை:

  • 20-25 எலுமிச்சை பழங்களை எடுத்து ஒரு பக்கெட்டில் பிழியவும்
  • 250 கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்க்கவும்; நன்றாக கலக்கவும்
  • அதனுடன் 10-15 கோழி அல்லது வாத்து முட்டை எடுத்து இந்த திரவத்தில் நன்றாக முழுகி வைக்கவும்.
  • இந்த பக்கெட்டை காற்று உள்ளே போகாதவாறு மூடி வைத்து நிழலில் வைகாவும்.
  • 10 நாட்களுக்கு பின்பு, முட்டையின் ஓடுகள் நன்றாக ஊறி ரப்பர் மாதிரி மாறியிருக்கும
  • கைகளால் இந்த கலவையை நன்றாக கலக்கவும்.
  • நன்றாக கலந்த பின், வெல்லத்தை நீரில் கலந்து, ஊறின கலவை அளவிற்கு சேர்க்கவும் (2 லிட்டர் திரவம் இருந்தால், 2 லிட்டர் வெல்ல நீர் ஊற்றவும்)
  • திரும்பி இந்த கலவையை நன்றாக மூடி நிழலில் வைக்கவும்
  • 10  நாள் கழித்து இந்த முட்டை ரசம் ரெடி!

பயன் படுத்தும் முறை:

  • 10-20 மில்லி லிட்டர் எடுத்து 1  லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்
  • நெல், வாழை, காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் போன்ற எல்லாவற்றிற்கும் பயன் படுத்தலாம்
  • காலையிலோ மாலையிலோ தெளிக்க வேண்டும்
  • பஞ்சகவ்யா  மற்றும் வேர்மிவாஷ் உடனும் கலந்து தெளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

திரு ந. கோபாலகிருஷ்ணன், 19, அகிலா நகர், முதல் குறுக்கு தெரு, கணபதி நகர் extension, மாம்பழம் சாலை, திருச்சி 620005.

அலைபேசி எண்: 09443148224 மற்றும 09942167789

ஈமெயில்: dngopal2003@yahoo.co.in

நன்றி: ஹிந்து நாளிதழ்

இயற்கை விவசாயத்தை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம். இன்னொரு இயற்கை ஈடு பொருளான பஞ்சகவ்யா பற்றி இங்கே படிக்கலாம்



பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *