இயற்கை விவசாயத்திற்கு பச்சை கொடி!

ஏழு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சி பின், கர்நாடகாவில் தார்வாத் ஊரில் உள்ள வேளாண் பலகலை கழகம் (University of Agricultural Sciences, Dharwad, Karnataka) ஒரு உண்மையை கண்டு வெளியிட்டு உள்ளது

இயற்கை வழி விவசாயம் செய்ய முன்படும் போது கேட்க படும் கேள்வி “எல்லாம் சரி. இயற்கை விவசாயத்தில் இதே அளவு சாகுபடி கிடைக்குமா? வருமானம் குறையுமா?” என்பது தான்..
இந்த கேள்விக்கு கர்நாடக வேளாண் பல்கலை கழகம் 7 ஆண்டுகள் விஞான முறையாக ஆராய்ச்சி செய்து வெளியுட்டுள அறிக்கை இது தான்:

  • இயற்கை முறை விவசாயத்திற்கு மாறும் பொது, மிளகாய், பருத்தி, சோளம் போன்றவற்றில் முதலில் 2 ஆண்டுகள் சாகுபடி சற்று குறைந்து இருந்தது. ஆனால, அதற்கு பின், இரண்டு முறைக்கும் எந்த பெரிய அளவில் வித்தியாசம் இல்லை
  • சோயா, வெங்காயம்,கடலை போன்ற பயிர்களில் இந்த முதல் இரண்டு வருட சாகுபடி குறைவும் இல்லை
  • உதாரணமாக கடலை சாகுபடியில் 6 ஆண்டுகாண சாகுபடியில், இயற்கை விவசாயத்தில் 2975 kg /ஹெக்டரும் ரசாயன விவசாயத்தில் 2604 kg /ஹெக்டேரும் கிடைத்தது
  • மேலும், இயற்கை விவசாயத்தில் ஊடு பொருட்களின் விலை குறைவு ஆதலால், லாபம் அதிகம்.
  • இயற்கை ஊடு பொருட்களால் நிலத்தில் 10-15% நீர் தேக்கும் சக்தி அதிகரிக்கிறது, இதனால் வறட்சியை இவை தாங்குகிறது
  • இந்த ஆராய்ச்சியின் போது  இயற்கை விவசாயத்திற்கு மண்புழு உரம் கம்போஸ்ட் போன்றவை பயன் படுத்தபட்டன

இப்படி பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவு அரசால் நடத்த படும் ஒரு வேளாண் பல்கலை கழகத்தில் இருந்து  வெளி வந்துள்ளது நல்ல செய்தி தானே!

நன்றி: ஹிந்து நாளிதழ்

Related Posts

மண்ணுக்கு வளம் தரும் பயோ ஃபிக்ஸ்... மண் வளம் காக்கும் அதேநேரத்தில், விதைகளுக்கு இயற்கை...
ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்... ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விவசாய...
பெருங்காயம் சமையலுக்கு மட்டும் அல்ல!... ஈரோடு அருகே உள்ள கொடுமுடி கிராமத்தில் உள்ள விவசாயி...
இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு... இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் ச...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *