இயற்கை விவசாயத்தில் பருத்தி

பருத்தி பயிரை தான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. பருத்தி பயிரில் தான் அதிக அளவில் ரசாயன பூச்சி மருந்துகள் பயன் படுத்த படுகின்றன
இந்த பயிரில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தும் டிப்ஸ் பார்ப்போமா?

  • விதையின் மேல் உள்ளபஞ்சை நீக்குவதற்கு, ஈர மாட்டு சாணத்துடன் விதையை கலந்து, 30 நிமிடம் காய வைத்து பின் கல் தரை மீது மெதுவாக உரசினால் பஞ்சு நீங்கிவிடும் பின் தூய்மைப்படுத்த வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதையை செம்மண் பூச்சு பூசி, வெயிலில் உலர்த்தி உபயோகித்தால் விதை நன்கு முளைப்பதோடு, விதைப்பிற்கும் ஏதுவாகும்.
  • பருத்தி விதையை ஒரு கிலோவிற்கு 200மிலி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து, பசும்மாட்டு சாணத்தை தடவி பின் இரவு முழுவதும் காய வைத்து விதைத்தால், பூச்சித் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • கடலைப் புண்ணாக்கை 3 முறை பயிர் காலத்தில் இடுவதால், பயிர் வளர்ச்சி துரிதப்படுத்துவதோடு, காய் பிடிப்பதும் அதிகரிக்கும்.
  • ஆமணக்குச் செடியை ஊடுபயிராகவோ, வரப்புப் பயிராகவோ பருத்தியுடன் நட்டால் அது புகையிலை வெட்டுப்புழுவை கவரும்.
  • மக்காச்சோளம், வெண்டையை ஊடுபயிராக நட்டால் காய்புழு தாக்குதலை குறைக்கலாம்.
  • மீன் கழிவை வெல்லத்துடன் 2:1 என்ற விகிதத்தில் வயலில் அங்கு இட்டால், கொக்கு மற்றும் புல்புல் வகைப் பறவைகளை அவை கவரும் இதன் மூலம் புகையிலை வெட்டுப்புழுவை உண்ணப்பட்டு தாக்குதல் குறையும்.
  • 5 கிலோ வேப்பங்கொட்டையைத் தூளாக்கி, 100 லிட்டர், தண்ணீரில் இட்டு ஒரு நாள் ஊறவிட்டு பின் வடிகட்டி நீர் சேர்த்து, சோப் கரைசல் கலந்து, பருத்திக்கு தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை 10 துண்டுகளாக வெட்டி, அதை மஞ்சள் தூள் ஊறவைத்துப் பின் காயவைக்கவும். பின் அதை மீண்டும் ஆமணக்கு எண்ணெய் மூழ்கவைத்து. வயலில் பல்வேறு இடங்களில் கட்டவேண்டும். அதன் கீழே சிம்னி விளக்கை வைத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
  • அரளி விதையை தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படும்.
  • 600 கிராம் புகையிலையை தண்ணீரில் 2 முதல் 3 நாட்கள் வரை ஊறவைத்து பின் வடிகட்டி தெளித்தால் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • சர்க்கரை கரைசலுடன் வேப்ப எண்ணெய் கலந்து அதை நீரில் கலக்கி பருத்தி செடி மீது தெளித்தால், மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • சாம்பலை பருத்தி இலை மீது தூவினால், அசுவின், இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.
  • சோளம் அல்லது கம்பு பயிரை பருத்தி பயிரைச் சுற்றி சாகுபடி செய்தால் வெள்ளை ஈ மற்றும்  இலைப்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • வேப்பங்கொட்டையை வசம்புடன் சேர்த்து தூளாக்கி, இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, பின் வடிகட்டி, பயிருக்கு மறுநாள் தெளித்தால் எல்லாவித பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம்.
  • பருத்தி பஞ்சை காலை வேளையில் மட்டும் எடுத்தால் தூசிபடுவது தவிர்க்கலாம்.
  • பருத்தியில் பூக்களும், இளங்காய்களும் விழுகாமல் இருக்க 50 மிலி ஆமணக்கு எண்ணெய்யை ஒவ்வொரு செடிக்கும் பயன்படுத்துவதால், செடி அருகே வெப்பம் குறைந்து, உதிர்வது  தடுக்கப்படும்.
  • ‘மகா’ என்று அழைக்கப்படும் பருவத்தில், பெய்யும் மழைநீரைச்சேமித்து, பயிருக்கு பின் பயன்படுத்தினால் அது வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
  • பருத்தியில் நல்ல அதிக உரம், மழைப் பெறப்பட்ட பகுதியில் உள்ள நன்கு உயரமாக வளரும். அதை அப்படியே விடாமல் அதன் நுனியைக் கிள்ளிவிட்டால் அதிகமாக காய் பிடிக்கும்
  • பருத்தி  செடியை பனியின் பாதிப்பிலிருந்து காக்க, பருத்தி சேடி வயலிற்கு அருகில் சாணி எரு, புல் கழிவு, வீணான எஞ்சின் ஆயிலைப் பயன்படுத்தி புகை மூட்டம் செய்தும், நீர்ப்பாய்ச்சியும் காக்லாம். சில விவசாயிகள் உயரமான செடியை பருத்தி வயலைச் சுற்றி அமைத்து, பனியிலிருந்து பருத்திச் செடியைக் காக்கலாம்
  • பருத்தியில், அசுவினி தாக்குதலைத் தடுக்க எருக்கலை இலையை நீர்ப்பாய்ச்சின வாய்க்காலில் இடவேண்டும்.
  • பருத்தியில் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு பாசன நீருடன் கலந்து விடலாம்.
  • பருத்தியால் அசுவினி மற்றும் புள்ளிக்காய்ப்புழு கூட்டுத் தாக்குதலைக்கட்டுப்படுத்த காய்ந்த புகையிலை இலை 250 கிராம் கிரகாசி 300 கிராமுடன் சிட்ரிக் அமிலம் கலந்து பின் 12 லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் 250 மிலி மருந்து 15 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து ஒரு தெளிப்பானுக்கு என்னும் அளவில் 4 தெளிப்பான் அளவு அடித்தால் பூச்சிக் கட்டுப்படுத்துவதோடு, பருத்திச் செடியில் நன்கு வளரும்
  • பருத்தியில் காணப்படும் தரைக் கூண்வண்டை கட்டுப்படுத்த, 20-25 கிலோ வெங்காயத்தை சணல் பையில் இட்டு, ஒரு மரக்கட்டைக்கொண்டு நசுக்கி, அப்படியே அந்த சணல் பையை நீரோட்டத்தில் போட்டால் போதும்
  • பருத்தி, கனகாம்பரம் மற்றும் இதர அழகு பூச்செடிகளுக்கு ‘அகேல்’ வெட்டிக்கோட்டை வேம்பு, புங்கம் புண்ணாக்கும், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக இடித்து, அதைக் கோமியத்தில் ஊறவைத்து, பின் வடிகட்டி அத்துடன் 1:8 பங்கு நீர் சேர்த்து தெளித்தால், பூச்சி நோய்கள் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *