குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் தனியார் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளதாவது:

  • குறுவை நெற்பயிரில் பல பகுதிகளில் பூச்சி தாக்கம் உள்ளது. குறிப்பாக நாற்று அழுகல் நோய் அஸ்வினி, இலைப்பேன், இலைசுருட்டு மற்றும் பல நோய் தாக்குதலும் பரவலாக உள்ளது.
  • இதிலிருந்து பயிரை காப்பாற்ற வேப்பங்கொட்டை கரைசல் மிகுந்த பயன் தரும்.

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:

  • ஒரு கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்து தூள் செய்து அதை 10 கோமியத்தில் 24 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின்னர் இந்த கலவையை கிளிஞ்சல் சுண்ணாம்பு அரை கிலோ கலந்து 48 மணி நேரம் கழித்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 8 டேங் கை ஸ்பிரேயர் கொண்டு காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலையில் 3 மணிக்கு பின்பும் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தெளிப்பதால் பயிர் நன்கு தெளிந்து மகசூல் பாதிப்பு இல்லாமல் கிடைக்கும்.
  • பூச்சி தாக்குதல் இல்லாத பயிர்களிலும் இதை பயன்படுத்தலாம்.
  • இந்த வகை வேப்பங்கொட்டை கரைசல் 50 சதவீதம் பூச்சி விரட்டியாகவும், 50 சதவீதம் பயிர் வளர்ச்சியாகவும் இருக்கிறது.
  • இந்த கரைசல் தயாரிக்கும்போது பிளாஸ்டிக் ட்ரம் மற்றும் மண்பானை, மண்தொட்டி, சிமென்ட் தொட்டி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  உலோக பாத்திரத்தில் பயன்படுத்தக்கூடாது.

நன்றி: தினகரன்

Related Posts

சம்பா, தாளடி நெற்பயிரில் நெற்பழநோய்... காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்...
இயற்கை விவசாயம் மூலம் உலக சாதனை... ஒரு காலத்தில் பீகார் என்றால் மோசமான செய்திகள் தான்...
“ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்’... தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், பி.ஏ.பி., பாசன...
இயற்கை வேளாண் பயிற்சி "நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *