சிறுநீரை உரமிட்டு பயன் பெரும் ஆப்ரிக்க விவசாயிகள்

நாம் எப்போதும் மேற்கத்திய நாடுகள் இருந்து தான் தெரிந்து கொள்ள விருப்பம். ஆனால் நம்மை போன்ற ஏழை நாடுகள் ஆன ஆப்ரிக்க போன்ற இடங்களில் என்ன யுத்திகள் பயன் படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்

மனித சிறுநீரை உரமாக பயன் படுத்துவதை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.
கென்யா போன்ற நாடுகளில் இதை Systematic ஆக பயன் படுத்துகிறார்கள்!

பள்ளி கூடங்களில் சிறுவர்களின் சிறுநீரை சேர்த்து நீருடன் கலந்து உரமாக
பயன் படுத்தி பயன் பெறுகிறார்கள்
இந்த கட்டுரையில் இருந்து தெரியும் சில உண்மைகள்:

  • மனித சிறுநீர் நைட்ரோஜென் (Nitrogen) , போச்போராஸ் (Phosphorus) அதிகம் உள்ள திரவம்
  •  ஒரு மனிதன் ஒரு ஆண்டில் 500 லிட்டர் சிறுநீர் கழிக்கிறான். இது 20 ஏகர் நிலத்திற்கு உரம் இடலாம்
  •  சேகரித்த  சிறுநீரை அன்றே பயன் படுத்த வேண்டும். இல்லா விட்டால் அம்மோனியா நாற்றம் வந்து விடும்
  • வாழை போன்ற பயிர்களுக்கு 1:1, கீரைகளுக்கு, காய்கறிகளுக்கு 1:4, சோளத்திற்கு 1:2 என்ற விகிதத்தில் சிறுநீர்:நீர் கலந்து வேரில் இடுகிறார்கள்.
  • நேராக சிறுநீரை வேரில் இட்டால் பயிர் பாதிப்பு ஆகும் சாத்தியம் அதிகம். நீருடன் சேர்ந்து இட வேண்டும்
  • காய்கறி செடிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை இட வேண்டும்
  • இந்த முறைக்கு பின் விவசாயிகள் அதிக மகசூல் கிடைத்து உள்ளது
  • இந்த முறை மூலம் ரசாயன உரம் வாங்கும் செலவு குறைகிறது. காய்கள்  வாசனையுடன் இருப்பதாக கூறுகிறார்கள்
  • ஒரே ஒரு எச்சரிக்கை – urinary infection இருப்பவர்கள் இருந்து சிறுநீரை சேகரிக்க கூடாது
  • கென்யாவில் இப்போது சிறுநீரை திரவ தங்கம் (Liquid Gold) என்று கூறுகிறார்கள்

நன்றி: farmafrica இணையத்தளம்

Related Posts

உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்... படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தி...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...
இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி... மன்னார்குடி அருகே ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே உள...
மல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம்... பட்டுப்புழு வளர்ப்பில் மல்பெரி உணவாக பயன்படுவதோடு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *