தர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் பெரும் விவசாயிகள்

தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பட்ட சாகுபடி பணிக்காக விவசாயிகள் வயல்வெளிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வயல்வெளிகளில் கடந்த காலங்களை போல் ஆட்டு பட்டி அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

விவசாய நிலங்களில் அதிக அளவில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் அடிப்பதால், பூமியில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு, மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் காற்று, நீர் ஆகியவை மாசு அடைகின்றன. இதனால், தாவரங்களில் நோய் எதிர்ப்பு திறனை இழந்து மரக்கன்றுகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால், விவசாயிகள் பலரும் இயற்கை உரங்களுக்கு மாற துவங்கி உள்ளனர்.

இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்தும், இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகள் மத்தியில் வேளாண், தோட்டக்கலை துறை, வனத்துறை மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

குப்பை கழிவுகள், சாண கழிவுகள் கிடைப்பது அரிதாக இருப்பதால், நிலங்களில் விவசாயிகள் ஆடு மற்றும் மாடுகள் பட்டி அமைத்து இயற்கை சாண உரங்களை வயல் வெளிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் ஆடிப்பட்ட சாகுபடி பணிகள் துவங்கிய நிலையில் பென்னாகரம், காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்கள் இறவை பாசன பகுதிகளில் ஆட்டுப்பட்டிகள் அமைத்து விவசாயிகள் சாணங்கள் பெறுகின்றனர்.

  • தங்கள் தேவைக்கு ஏற்ப பட்டிகளை அமைத்து கொள்ளலாம்.
  • ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  • மேய்ச்சல் நேரங்கள் போக இரவு, பகல் நேரங்களில் வயல் வெளிகளில் அமைக்கப்படும் பட்டிகளில் ஆடுகள் அடைக்கப்படுகிறது.
  • அதே போல் மாட்டு பட்டி அமைப்பவர்கள் இரவு நேரங்களில் வயல் வெளிகளில் மாடுகளை நிறுத்தி விடுகின்றனர்.
  • காலையில் மாட்டு சாணங்கள் வயல் முழுவதும் பரவி இயற்கை உரங்கள் வயல்வெளிகளுக்கு கிடைக்கிறது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *