தழைச்சத்து பயிராக சித்தகத்தி

செயற்கை உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயிரிட விவசாயிகள் நாட்டம் காட்டுகின்றனர். இதற்காக, சதைப்பற்றுள்ள பயறு வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

 • ரசாயன உரங்களின் விலை அதிகம் என்பது மட்டும் அல்லாது மண் வளத்தையும் பாதிக்கிறது. இதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பசுந்தாள் உரம்.
 • மண்ணில் அங்ககப் பொருட்களை அதிகரிப்பதற்காக பயிரிடப்படும் பயிர்கள், பசுந்தாள் உர பயிர்கள் ஆகும்.
 • தக்கை பூண்டு, கொளிஞ்சி, சணப்பு, கிளைரிசியா, அவரை, புங்கம், எருக்கு, சூரியகாந்தி உள்ளிட்டவை பசுந்தாள் உர பயிர்கள் ஆகும்.
 • பயிர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்துவது அல்லது மண்ணில் அங்கக பொருட்களை நிலைநிறுத்துவது, பசுந்தாள் உரமிடுதலின் குறிக்கோள் ஆகும். பயறு வகை பயிர்கள் அதிக சதைப்பற்று உடையவை.
 • மிக குறுகிய காலத்தில் வளரும் தன்மை வாய்ந்தவை.
 • இவை நன்கு வளர்ந்ததும், விதைகள் முற்றுவதற்கு முன்பாக, நிலத்தில் உழுதுவிட வேண்டும்.
 • இதன் மூலம், பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து நிலத்தில் சேர்க்கப்படுகிறது.
 • தழைச்சத்து பயிர்கள், முதன்மை பயிர்களால் உறிஞ்சப்பட முடியாத, நிலத்தில் ஆழமான பகுதியில் உள்ள சத்துக்களை உறிஞ்சி தாவரங்களில் சேமிக்கின்றன.
 • முதன்மை பயிர்களின் அறுவடை காலத்திற்கு பின், வறட்சியான காலத்தில் பயிரிடப்படுகிறது.
 • விரைவாக வளர்ந்து, மண் வளத்தை பாதுகாக்கிறது.
 • மேற்கண்ட காரணங்களால் விவசாயிகள், பசுந்தாள் உரத்திற்காக பச்சை பயறு வகை செடிகளை பயிரிட தொடங்கியுள்ளனர்.
 • இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறுகையில், “ஆர்.கே.பேட்டை, திருத்தணி பகுதியில் சித்தகத்தி செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. அனைத்து பருவத்திலும் பயிரிடலாம். 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்; 45 முதல் 60 நாட்களில் அறுவடை செய்யலாம். விதைக்கான அறுவடை என்றால், பயிர் காலம், 130 நாட்கள். ஒரு ஏக்கரில், 600 கிலோ விதை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு, 18 முதல், 20 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும்’ என்றனர்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் ...
தசகாவ்யா தயாரிப்பு முறை தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு.இதில் பத்து வகையான ...
இயற்கை உரம் மூலம் தழைச்சத்து தழைச்சத்து அதிகம் கிடைக்க இயற்கை உரங்களை விவசாயிகள...
அடே! திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்!... இந்தியாவில் சுத்தமான நகரங்களில் டாப்-10இல் வந்த தி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *