நிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை

‘சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, சொல்றதுக்கு அசிங்கமாக இருக்கலாம்; ஆனால், பலன் தரக்கூடியது,” என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.

அதனால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானார். ட்விட்டர், facebook மற்றும் டிவி சேனல் அறிவு ஜீவிகள் அவரை வறுத்து எடுத்தனர்.

gadkari

 

 

 

 

 

ஆனால் உண்மை என்ன?

பசுமை தமிழகத்தில் சிறுநீர் அருமை பற்றி பல தகவல்கள் படித்து உள்ளோம். நம் நாடு மட்டும் இல்லை, பல நாடுகளில் உள்ள ஆராய்சிகள் மூலம் சிறுநீர் உரமாக பயன் படுத்துவதின் மகிமை நிரூபிக்க பட்டு உள்ளது.

இதோ, இப்போது பெங்களூர் வேளாண் பல்கலை கழகத்தின் ஆய்வும் இதை நிரூபிக்கிறது:

 செடிகளுக்கு மனித சிறுநீரை ஊற்றினால் விளைச்சல் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியது உண்மை என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது டெல்லி பங்களாவில் உள்ள செடிகளுக்கும், மரங்களுக்கும் தன்னுடைய சிறுநீரை ஊற்றுவதால் அவை வேகமாக வளர்வதுடன் கூடுதலான விளைச்சல் அளிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளானார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பிரிவு ஆர்கியம் என்ற என்ஜிஓவின் ஆதரவுடன் கடந்த 2008ம் ஆண்டு ஆய்வு ஒன்றை துவங்கியது.

அந்த ஆய்வில் மனிதனின் சிறுநீர் செடிகளுக்கு ரசாயன உரத்தை விட சிறப்பான உரமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வுக்கு கைடாக இருந்த பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீனிவாசமூர்த்தி கூறுகையில், ஜிப்சத்துடன் கலந்து மனித சிறுநீரை பயன்படுத்துகையில் விளைச்சல் அதிகரிக்கிறது.

இது ரசாயன உரங்களை காட்டிலும் அதிக விளைச்சலை அளிக்கிறது. தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், ராகி, பீன்ஸ், பூசணிக்காய் ஆகியவை மனித சிறுநீரை ஊற்றி வளர்த்தால் அமோகமாக வளர்கிறது.

கோமியத்தை விட மனித சிறுநீரில் அதிக சத்துகள் உள்ளன என்றார்.

சீனா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மணிபூரில் உருளை மற்றும் பச்சைமிளகாய் விளைச்சலில் மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/gadkari-is-right-urine-good-plants-226346.html

சிறுநீர் உரமாக பயன் படுத்தும் முறைகளை பற்றி இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *