நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி

நெற்பயிரை தாக்கி அழிக்கும் புகையான், வெண் புகையான் உள்ளிட்ட பூச்சிகளை இயற்கை எதிரி பூச்சிகளைப் பயன்படுத்தி அழிக்க வேண்டும்.

 • நெற்பயிரை தாக்கும் புகையான், வெண்முதுகு புகையான், குருத்தப் பூச்சி, இலை மடக்குப்புழு, பச்சை மற்றும் வெள்ளை தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை எதிரிகளைக் கொண்ட பூச்சிகளை பயன்படுத்த வேண்டும்.
 • எட்டுக்கால் சிலந்திகள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 10 முதல் 12 புகையான்கள் அல்லது வெண்முதுகுப் புகையான்கள் 3 முதல் 6, பச்சை மற்றும் வெள்ளை தத்துப்பூச்சிகள் இரண்டு குருத்துப் பூச்சிகள் அல்லது இலை மடக்குப் புழு ஐந்து களைக் கொன்று உண்ணும் திறன் வாய்ந்தது. எனவே, இதை வயலில் வளர்க்க வேண்டும்.
 • பொறி வண்டுகள் அதன் குஞ்சுகள் மற்றும் தாய் வண்டுகள், புகையான், தத்துப்பூச்சி அகவுனி, நெற்பேன், இலை மடக்குபுழு, மாவுப் பூச்சிகள், குருத்துப் பூச்சிகளை ஒரு நாளைக்கு இரண்டு முதல் 3 வரை கொன்று அழிக்கும்.
 • தரை வண்டுகள் ஒரு நாளைக்கு 8 முதல் 15 புகையான் மற்றும் தத்துப்பூச்சிகளை உண்ணும் திறன் பெற்றவை.
 • பச்சை நாவாய்பூச்சி ஒரு நாளைக்கு 3 அல்லது ஐந்து புகையான் மறம் தத்தப்பூச்சிகளை கொன்று திண்ணும் திறன் வாய்ந்தது.
 • விசித்தட்டான் இலை புகையான், தத்துப்பூச்சிகளை பிடித்து உண்ணும்,
 • மீதைல் பார்த்தியா, குயினால்பாஸ் மற்றும் செயற்கை பைரித்திராய்டு போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகளை நெற்பயிரில் பயன்படுத்தினால் மேற்கண்ட இயற்கை எதிரிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
 • நெல்லில் இலைப்புழுக்கள் கட்டுப்படுத்த டிரைகோ கிராம்மா கைலோனிஸ் என்ற மூட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40 ஆயிரம் என்ற அளவில் வயலில் தாய் அந்துப் பூச்சிகள் நடமாட்டம் தென்பட்டவுடனேயே விட வேண்டும்.
 • ஏக்கருக்கு ஐந்து விளக்குப் பொறிகளை வைத்து அந்திப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
 • அளவுக்கு அதிகமாக யூரியா உபயோகிக்கக் கூடாது.
 • வயல் வரப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
 • பொருளாதார சேத அளவுக்கு மேல் காணப்பட்டால் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள களப்பணியாளர்களிடம் ஆலோசனை பெற்று பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நம்மாழ்வார் விட்டுச்சென்ற ‘வானகம்’!... இன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை வி...
உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்... படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தி...
இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்... இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்ல...
திருந்திய நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கார் மற்றும் முன் சம்பா ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *