பசுந்தாள் உரம் செய்வது எப்படி?

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கூடியவை பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களை பயன்படுத்துமாறு வள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மார்சலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மண் வளத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை இயற்கை உரங்களே ஆகும். இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க கூடியவை பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களே ஆகும்.

பசுந்தாள் உரங்கள்:பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரை பயிரிட்டு அதை மடக்கி உழுது நிலத்தில் சேர்ப்பதாகும். இவற்றில் முக்கியமானவை தக்கை பூண்டு, கொளுஞ்சி, சணப்பை, அகத்தி, சீமை அகத்தி போன்ற பயிர்களாகும்.

பசுந்தழை உரங்கள்:பசுந்தழை உரம் என்பது வேறு இடத்திலிருந்து பச்சை குழை, தழைகளை சேகரிப்பதாகும். இவ்வகை குழை, தழைகளை சேகரித்து நடவு வயலில் இட்டு மிதித்து விடுவதாகும். பசுந்தழை உரங்களில் முக்கியமானவை ஆவாரை, புங்கம், பூவரசு, வேம்பு, வாதநாராயணன், ஆடாதொடா, நொச்சி, சவுண்டை ஆகியவை ஆகும்.

பசுந்தாள் உரங்களின் நன்மைகள்:

  • பசுந்தாள் உரம் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கிறது. இதனால் நிலம் வளமடைகிறது.
  • பசுந்தாள் உரம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 45 கிலோ வரை தழைச்சத்தை மண்ணிற்கு அளிக்கிறது. பசுந்தாள் உரப்பயிர் நிலத்தின் அமைப்பை சீராக்குகிறது. மண் அரிப்பை தடுப்பதுடன் வளமான மேல் மண்ணை பாதுகாக்கிறது.
  • மண்ணின் கரிமப்பொருளை அதிகப்படுத்துவதோடு மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது.
  • மண்ணின் கீழ் பகுதியிலுள்ள சத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து பயிருக்கு சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.
  • பார் நிலத்தை சீர்செய்கிறது.
  • பசுந்தாள் உரப்பயிர்களை நிலத்தில் இடுவதால் விளை பொருட்களின் தரம் அதிகரிக்கிறது.

பசுந்தாள் உரம் இடும் முறைகள்:

பசுந்தாள்களை நடவுக்கு இரு வாரங்களுக்கு முன் இடவேண்டும். ஏக்கருக்கு 2 ஆயிரத்தை 500 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

பசுந்தாள் பயிரை பூ பூக்க தொடங்கிய உடனேயே மடக்கி வயலை உழ வேண்டும்.

நன்றி: தினமலர்

பசும்தாள் உரம் பற்றிய இன்னொரு பதிவை இங்கே படிக்கலாம்

Related Posts

பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி?... விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப...
பசுந்தாள் உரங்கள் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மண...
உரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்... விவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயி...
யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்... : ""யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *