பாரம்பரிய காய்கறி விதை திருவிழா!

“”திருத்துறைப்பூண்டியில் மாநில பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது,” என கிரியேட் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் அறிவித்து உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கிரியேட் பண்ணையில் மாநில அளவிலான பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது.

  • திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்கம், ஜி.டி. பவுண்டேஷன், பாலம் தொண்டு நிறுவனம், வேவ்ஸ் பவுண்டேஷன், ஒற்றுமை அறக்கட்டளை சார்பில் நடக்கும் இவ்விழாவில் வீட்டு தோட்டத்துக்கான அனைத்து விதமான பாரம்பரிய காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
  • பாரம்பரிய காய்கறி விதைகளைக் கொண்டு இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்படும்.
  • இதில், மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ராகவன், காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறார்.
  • 75 நபர்கள் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, இவ்விழாவில் பங்கேற்க விரும்புவோர், “பயிற்சி இயக்குனர், கிரியேட், பெருமாள் கோவில் தெரு, ஆதிரெங்கம், கட்டிமேடு – 614716, திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்,’ என்ற முகவரிக்கு அஞ்சல் அட்டை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
  • கூடுதல் விபரங்களுக்கு 04369220954 மற்றும் 9842607609 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பாரம்பரிய காய்கறி விதை திருவிழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *