பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி

கர்நாடகாவில் உள்ள சமரஜநகர் மாவட்டத்தில் உள்ள ஒடையார் பாளையம் கிராமத்தில் உள்ள ஓர் வீட்டின் இருட்டு அறையில் வரிசை வரிசை ஆக சிறிய பானைகளும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில் களும் உள்ளன
இவை எல்லாம் பாரம்பரிய விதைகள்.

இவற்றை தன்னுடைய உழைப்பால் சேகரித்து உள்ளார் இந்த ஊரை சேர்ந்த குருசுவாமி. 10 ஆண்டுகளாக பாரம்பரிய விதைகள் சேர்த்து வருகிறார் இவர்.
கர்நாடகத்தில் உள்ள பாரம்பரிய விவசாயிகள் மூலம் கிடைத்த விதைகள் இவை.

திரு குருசுவாமி கூறுகிறார்: “இயற்கைக்கும் விவசாயிக்கும் இருந்த பாரம்பரிய அறிவு, இப்போது வந்த அறிவியல் விஞானிகள் புரிந்து கொள்வதில்லை. நிலத்திற்கும் இடத்திற்கும் பொருந்தாத பயிர்களை விளைக்கும் படி கூறுகிறார்கள். ரசாயன பூச்சி கொல்லிகளும் ரசாயன உரங்களும், பாரம்பரிய பயிர்களை முக்கால் வாசி அழித்து விட்டன. இப்படி, பாரம்பரிய விவசாயம் செய்யும் சிலர் மட்டுமே இவற்றை பற்றி தெரிந்தவர் ஆக இருக்கிறார்கள்”

இவரிடம் பாரம்பரிய விதை வாங்கி கொண்டு சென்று செல்லும் விவசாயிகள் இவருக்கு திரும்பி விதைகளை கொடுக்கின்றனர். 20 ரூபாய் முதல் 25 வரை இவர் வாங்கி கொள்கிறார்.

ஆர்வத்தால் இந்த முயற்சியை விடாமல் செய்து வரும் இவரை 09008167819 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *