பொன்னீம் கட்டுபடுத்தும் பூச்சிகள்

இயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். இந்த இயற்கை பூச்சி விரட்டி பயன் தரும் பயிர்களை பற்றி தினமலரில் செய்தி வந்துள்ளது:

பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

  • அசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.
  • காய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.
  • படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
  • நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.
  • முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயிலை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கலாம்.
  • இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.
  • உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபும்-638 653. எம்.அகமது கபீர், அலைபேசி எண்:  09365748542.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *