பொன்னீம் கட்டுபடுத்தும் பூச்சிகள்

இயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். இந்த இயற்கை பூச்சி விரட்டி பயன் தரும் பயிர்களை பற்றி தினமலரில் செய்தி வந்துள்ளது:

பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

  • அசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.
  • காய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.
  • படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
  • நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.
  • முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயிலை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கலாம்.
  • இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.
  • உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபும்-638 653. எம்.அகமது கபீர், அலைபேசி எண்:  09365748542.

நன்றி: தினமலர்

Related Posts

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி... இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்...
மூலிகைப் பூச்சி விரட்டி! பூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துக...
பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்... வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி...
பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேம்பு!... இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *