வறண்ட பூமியில் வற்றாத லாபம்!

ராமநாதபுரம் அருகே வழுதூரில் இயற்கை விவசாய முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, விவசாயத்துடன் அதை சார்ந்த உப தொழில்களை செய்து வளமான வருமானத்துக்கு வழிகாட்டுகிறார் விவசாயி நந்தகுமார். இவர் வெளிநாட்டு வேலை தேடி வந்தும், அதை உதறினார். இயற்கை விவசாயத்தின் பால் கொண்ட ஈர்ப்பால் வழுதூரில் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அரசு உதவியுடன் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துள்ளார்.
இங்கு ஒரு ஏக்கரில் தென்னை, 50 சென்ட் நிலத்தில் மா சாகுபடி செய்துள்ளார். இவற்றிற்கு இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். தவிர, ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ மற்றும் காளான் வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்க்கிறார். பந்தல் காய்கறிகள், செடி வகை காய்கறிகள் மற்றும் 7 வகை கீரைகள் சாகுபடி செய்து வறண்ட பூமியில் விவசாயம் மூலம் வற்றாத லாபம் ஈட்டி வருகிறார்.
நந்தகுமார் கூறியதாவது:

  • பால் காளான் கோடை காலத்திலும், சிப்பி காளான் மழை காலத்திலும் வளரும் தன்மை கொண்டது. காளான் வளர்ப்புக்கு 3 சென்ட் இடம் போதும். காளான் குடில் அமைத்து வளர்க்கலாம்.
  • காளான் விதைகளை மாவட்ட மகளிர் திட்ட முகாம் மூலம் பெறப்படுகிறது. 300 கிராம் விதைகளை ரூ.30க்கு வாங்குகிறோம். இதில் ஒன்றரை கிலோ காளான் உற்பத்தி செய்யலாம். குடில் அமைக்க ரூ.75 ஆயிரம் செலவாகும்.ரூ.30 ஆயிரம் அரசு மானியம் உண்டு. காளான் கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது. தற்போது ஆரம்ப நிலையில் தினமும் 4 கிலோ காளான்
    உற்பத்தியாகிறது. சில மாதங்களில் 10 கிலோ வரை உற்பத்தியாகும் என எதிர்பார்க்கிறோம்.
  • மா, தென்னை, காய்கறி உற்பத்தியை அயல் மகரந்த சேர்க்கை மூலம் அதிகரிப்பதற்காக தோட்டக்கலைத்துறை உதவியுடன் தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளேன். துறை சார்பில் தேன் கூடு ஈக்களுடன் 20 பெட்டிகள் இலவசமாக தருகின்றனர். இதில் ஆறு மாதங்களில் ஒரு பெட்டியில் 600 கிராம் தேன் வரை எடுக்கலாம். ஒரு கிலோ தேன் ரூ.400க்கு கொடுக்கிறோம். 55 தேன் கூடு பெட்டிகளை பராமரிக்கிறேன்.
  • மீன் வளர்ப்புக்காக முதன்முறையாக பண்ணை குட்டை அமைத்துள்ளேன். இதில் 1000 பாலை மீன், கட்லா மீன் வளர்க்கிறேன். ஆறு மாதங்களில் மீன்கள் வளர்ந்து விற்பனைக்கு தயாராகும். பாலை மீன் கிலோ ரூ.150. கட்லா ரூ.250 வரை விலை போகும். கட்லா மீன் ஒன்று ஒன்றரை கிலோ எடை, பாலா மீன் 400 கிராம் எடை வரை வளரும். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்ததால் விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்றார்.

தொடர்புக்கு 09486575172 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வறண்ட பூமியில் வற்றாத லாபம்!

  1. SIVAPRAKASAM.S says:

    இந்த கூட்டு முயற்சி மென்மேலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *