வேப்பங்கொட்டை கரைசல் (5% கரைசல்) தயாரித்தல் எப்படி?

தேவையான பொருட்கள் நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு

  • நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ
  • தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்
  • சோப்பு – 200 கிராம்
  • மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக

செய்முறை

  • தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).
  • நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.
  • இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  • மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
  • இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.
  • இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)
  • பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.

குறிப்பு

  • வேப்பம் கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுபட நிழலில் உலர்த்த வேண்டும்.
  • எட்டு மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், அவைகள் வேப்பங்கொட்டை சாறு தயாரிப்பதற்கு ஏற்றதாய் இருக்காது.
  • எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.
  • மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *