உளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்

உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம்.உளுந்துப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது 30-40 நாள்கள் பயிராக உள்ளது. டி.ஏ.பி. கரைசல் தெளிக்க இதுவே ஏற்ற தருணம்.

  • உளுந்துப் பயிரை நன்செய் தரிசில் சாகுபடி செய்வதால் அடி உரமிட வாய்ப்பில்லை.
  • அதிக மகசூல் பெற இலைவழி உரம் அளித்தல் மிகவும் அவசியம்.
  •  செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது 2 சதவிகிதம் டி.ஏ.பி. கரைசல் தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.  பின்னர் மறுநாள் நீரை வடிகட்ட வேண்டும்.
  • வடிகட்டிய நீரில் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கலவை தயார் செய்ய வேண்டும்.
  • இந்த கலவையை மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு பயிரில் தெளிக்க வேண்டும்.
  •  டி.ஏ.பி. 2 சதவிகித கரைசல் தெளிப்பின்போது நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.
  • மீண்டும் கரைசலை 15 நாள்கள் கழித்து தெளிக்க வேண்டும்.
  •  இவ்வாறு தெளித்தால் பயறு வகைப் பயிர்களில் உண்டாகும் பூக்கள் அனைத்தும் காய்களாக உருவாகி செடிகளில் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரித்துள்ளார் பாளையங்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. வெள்ளைப்பாண்டி.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *