பயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்

தர்மபுரியை அடுத்த சோலைக்கொட்டாயில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜன், வேளாண் உதவி இயக்குனர் (விதை சான்று) வெங்கடேசன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் ஆகியோர் பேசினர்.வேளாண் இணை இயக்குனர் ராஜன் பேசியாதவது:

  • பூக்கும் தருணத்தில் உள்ள பயிறு வகை பயிர்களுக்கு இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.
  • இதற்கு ஏக்கருக்கு 5 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவு ஊர வைத்து மறு நாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி 250 லிட்டர் நீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேணடும்.
  • இது பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதோடு, தரமான விதைகளை உருவாக்கி மகசூல் அதிகரிக் செய்யும்.வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் பேசியதாவது:
  • ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ தரமான விதை போதுமானது. உயிர் உரவிதை நேர்த்திக்கு இரண்டு பொட்டலம் ரைசோபியம் 400 மி.லிட்டர் ஆறிய கஞ்சியுடன் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
  • பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிருக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்கு, பயிர் 10 செ.மீ., இடைவெளியில் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
  • ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும்.

நன்றி: தினமலர்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்!... தமிழகத்தில் நிகழ் சம்பா பருவத்தில் வரப்பு பயிராக ப...
பயறு பயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கரைசல்... பயறு வகைகளில் புரதச்சத்து (20-24 சதம்) இருக்கின...
உளுந்து சாகுபடி டிப்ஸ் உளுந்து சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து...
உளுந்து பயிரில் புழு தாக்குதல் கட்டுபடுத்தும் முறைகள்... புரோட்டினியா புழு:பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்ற...

2 thoughts on “பயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *