உரங்களுக்கான மானியங்கள் குறைப்பு

இந்த நிதியாண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்களை குறைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுத்துள்ளது.

சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைவு ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டபோதும், டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு டன்னுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ. 1000 குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்தை குறைத்து மத்திய அமைச்சரவை முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்த நிதியாண்டுக்கான மானியக் குறைப்பு என்பது 15 சதவீதம்தான். உரங்களின் பயன்பாட்டைப் பொறுத்தே அதற்கு அளித்து வரும் மானியத்தின் அளவு அமையும்’ என்றார்.

இந்த செயலால், ஏற்கனவே விலை உயர்ந்துள்ள உரங்களின் விலைகள் மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி 
ஆங்கிலத்தில்: ஹிந்து நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மட்கிய உரம் தயாரிப்பது எப்படி?... அங்கக கழிவுகள் மற்றும் அங்கக (organic) பொருட்கள், ...
மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்... ஜீரோ பட்ஜெட் விவசாயம் பிரபல படுத்திய திரு சுரேஷ் ப...
நிலக்கடலை மகசூல் பெருக நிலக்கடலை ரிச்... தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், நிலக்கடலை மகசூல்...
எருக்கம் செடி இயற்கை உரம் வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்கா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *