தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்

 • இந்த முறையில் 3 அடி அகலம் 11/2 அடி உயரம் 20 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும்.
 • இதுபோல அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை தொட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.
 • தொட்டியின் அடிப்பாகத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக 5 அடிக்கு ஒரு துவாரம் வீதம் இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • தொட்டியில் மண்புழு உரம் தயாரிக்க மழை மற்றும் வெய்யிலிலிருந்து பாதுகாக்க கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • மக்கிய கால்நடைக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை மேற்சொன்ன தொட்டிகளிலிட்டு தண்ணீர் தெளித்து வரவேண்டும்.
 • வெப்பம் அடங்கிய பின்னர் உரத் தயாரிப்பிற்கு தயாராக உள்ள மேற்படி கழிவுகளின் மேல் பரப்பில் தேர்ந்தெடுக்க மண்புழுக்களை இடவேண்டும்.
 • மண்புழுக்கள் மண்புழு உர உற்பத்தி செய்து வரும். பண்ணையாளர்களிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
 • சதுர மீட்டருக்கு 2000 புழுக்கள் என்ற அளவில் விட வேண்டும்.
 • தோராயமாக 1 கிலோவிற்கு 1500 முதல் 2000 புழுக்கள் இருக்கும்.
 • பத்து கிலோ மண்புழுக்கள் 1 மாதத்தில் 1 டன் கழிவுகளை உண்ணும் திறனுடையவை.
 • மண்புழுக்கள் 2 1/2 மாதத்தில் 2 மடங்கு இனப்பெருக்கம் அடைந்து விடும்.

மண்புழு உரத்திலுள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவுகள்

நுண்ணுட்டம் – மண்புழு உரம் – சாதாரண தொழு உரம்
நைட்ரஜன் – 1.5% – 0.3%
பாஸ்பரஸ் – 1.0% – 0.2%
பொட்டாஸ் – 0.65% – 0.3%
ஜிங்க் – 04.6 PPM – 14.5 PPM
இரும்பு – 1247.3 PPM – 1465 PPM
மாங்கனீஷ் – 509.7 PPM – 69.0 PPM
தாமிரம் – 61.5 PPM – 2.8 PPM

பயிர்களுக்கு வழங்கும் மண்புழு உரத்தின் அளவுகள்
பயிர் – அளவு ஏக்கர் 1க்கு
நெல் – 500 முதல் 750 கிலோ/1 ஏக்கர்
கரும்பு – 1000 முதல் 1500 கிலோ / 1 ஏக்கர்
பயிறு வகைகள் – 500 கிலோ / 1 ஏக்கர்
உருளைக்கிழங்கு – 1000 முதல் 1500 கிலோ
காய்கறிகள் – 750 கிலோ
எண்ணெய் வித்துக்கள் – 1000 கிலோ
பூச்செடிகள் – 750 முதல் 1000 கிலோ
மஞ்சள், இஞ்சி, பூண்டு – 1000 கிலோ
வெற்றிலை – 1000 கிலோ
ஏலக்காய், கிராம்பு, ரப்பர் – 3 முதல் 8 கிலோ வரை / செடி 1க்கு
அழகு பூ தொட்டிகள் – 200 கிராம் -1 பூ தொட்டிற்கு
மாமரம், தென்னை, பாக்கு, கொய்யா, மாதுளை, வாழை – 3 கிலோ 1 மாதத்திற்கு
சப்போட்டா – 7 கிலோ முதல் 10 கிலோ வரை / 1 மாதத்திற்கு

N.பழனிச்சாமி, S.S.மண்புழு உரத்தொழிற்சாலை,
மதுரை மாவட்டம். 09842688456, 09842524480

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை... தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு வி...
நிலக் கடலையில் அதிக மகசூல் பெற உரமிடும் முறை... நிலக் கடலையில் அதிக மகசூல் பெற  வேளாண் உதவி இயக்கு...
உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?... திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்...
விலை உயர்வால் 80 லட்சம் டன் உரம் தேக்கம... நடப்பு நிதியாண்டின் (2013) இறுதியில், 80 லட்சம் டன...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *