நிலக்கடலைக்கு தேவை ஜிப்சம்

தென்காசி:நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட வேண்டும் என  வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலங்களில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிருக்கு பூக்கும் சமயத்தில் ஜிப்சம் இட வேண்டும். ஏக்கருக்கு 80 கிலோ வீதம் செடியை சுற்றி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால் மண் இலகுவாகி பூக்கள் திரட்சியான காய்களாக மாறும்விதைத்த 45ம் நாள் நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி: தினமலர்

Related Posts

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற டிப்ஸ்... இறைவை நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவ...
கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?... பரங்கி, பாகல், பீர்க்கு, புடலை, சுரை, வெள்ளரி போன்...
நிலக்கடலையில் விதை மேலாண்மை முறை... மணிலா சாகுபடி (நிலக்கடலை) செய்யும் விவசாயிகள் அதிக...
பசுந்தாள் உரங்கள் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மண...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *