நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்

நெற்பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வாறு முக்கியமோ அதுபோல் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியமாகும்.

  • நெல் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோவுடன் சமபங்கு மணல் கலந்து நடவுக்கு முன்பு தனியாக இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு நுண்ணூட்ட உரமிட்டு நடவு செய்வதால் பயிருக்கு தேவையான இரும்புசத்து 0.3 சதம், மாங்கனீசு 0.3 சதம், துத்தநாகம் 3 சதம், தாமிரம் 0.4 சதம், போரான் 0.2 சதம், மக்னீசியம் 4 சதம் எளிதாக கிடைக்கிறது.
  • பயிர் வளர்ச்சியின் போது நுண்ணூட்ட உரச்சத்தை எடுத்துக் கொள்வதால் நெற்பயிர் நல்ல முறையில் வளர்கிறது.
  • அதிகமாக சிம்புகள் வெடித்து தூர் கட்டும். தண்டு வாளிப்பாக வெளிவரும். நெல்மணிகள் திரட்சியாகவும், பருமனாகவும் இருக்கும்.
  • நெல்மணிகள் பெருகி அதிக மகசூல் கிடைக்கிறது.
  • நெல் நுண்ணூட்ட உரம் கடையநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) முருகையா தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *