பயனளிக்கும் பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரமானது மண்ணுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தரக்கூடியது. மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. அத்துடன் மண்ணின் பவுதீக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது.
எனவே, பசுந்தாள் உரமிடுவதால் மண் அரிப்பு தடுக்கப்படுவதோடு நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுகிறது. பசுந்தழைகள் மிக இடுவதால் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.
மண்ணின் கார அமிலத் தன்மை சீர்படுத்தப்படுகிறது. 1 ஏக்கருக்கு பசுந்தாள் உரப் பயிர்களின் விதைகளை 8 முதல் 10 கிலோ வரை ஈரத்தை பயன்படுத்தி விதைப்புச் செய்யவேண்டும்.
நன்கு வளர்ந்தவுடன் பூப்பூக்கும் முன் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவுச் செய்வதால் மண்வளம் அதிகரித்து தொடர்ந்து சாகுபடி செய்யும் பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.
எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிர் விதைகளைக் கோடை மழையின் ஈரத்தைனைப் பயன்படுத்தி விதைப்புச் செய்து மண்வளத்தினைப் பாதுகாக்கலாம்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள்... பயிர் சுழற்சியில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதா...
பசுந்தாள் உரங்கள் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மண...
இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்... வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வர...
மண்வளம் பெறுக பசுந்தாள் உரம் மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற சுந்தாள் உர பயி...

One thought on “பயனளிக்கும் பசுந்தாள் உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *