பயனளிக்கும் பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரமானது மண்ணுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தரக்கூடியது. மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. அத்துடன் மண்ணின் பவுதீக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது.
எனவே, பசுந்தாள் உரமிடுவதால் மண் அரிப்பு தடுக்கப்படுவதோடு நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுகிறது. பசுந்தழைகள் மிக இடுவதால் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை சீர்படுத்தப்படுகிறது.
1 ஏக்கருக்கு பசுந்தாள் உரப் பயிர்களின் விதைகளை 8 முதல் 10 கிலோ வரை ஈரத்தை பயன்படுத்தி விதைப்புச் செய்யவேண்டும்.
நன்கு வளர்ந்தவுடன் பூப்பூக்கும் முன் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவுச் செய்வதால் மண்வளம் அதிகரித்து தொடர்ந்து சாகுபடி செய்யும் பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.
எனவே,  விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிர் விதைகளைக் கோடை மழையின் ஈரத்தைனைப் பயன்படுத்தி விதைப்புச் செய்து மண்வளத்தினைப் பாதுகாக்கலாம்
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு!... விவசாய ஈடு பொருட்களில் முக்கியமானது ரசாயன உரங்கள் ...
மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்... விவசாயிகள் மண்ணின் தன்மையை அறிந்து உரமிட்டால், உரச...
உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?... திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்...
இயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள்... பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு செல்லும் வெள்ளைப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *