மகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள்

  • பயிர் சுழற்சியில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதால் மண்ணில் குறிப்பிட்ட சத்துகள் உறிஞ்சப்பட்டு, பிற சத்துகள் தொடர்ந்து பயிருக்கு கிடைக்காத சூழல் உருவாகிறது.
  • இக்குறையை செயற்கை உரம் மூலம் ஈடுகட்ட இயலாது.
  • பசுந்தாள் உரப்பயிர்களை பயிர் செய்து மடக்கி உழுவதால் இது ஈடுசெய்யப்படுகிறது.
  • ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பயறுவகை பசுந்தாள் உரப்பயிர்கள் இன்றியமையாதவை. ஏனெனில் காற்றில் உள்ள அபரிமிதமான (நைட்ரஜன்) தழைச் சத்துகளை வேர்முடிச்சுகள் மூலம் கிரகித்து தன்னுடைய வளர்ச்சிக்கு போக எஞ்சிய சத்துகளை தொடர்ந்து பயிர்களுக்கு அளிக்க வல்லது.
  • தொழுஉரம் கிடைக்காத பட்சத்தில் மாற்றாக பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டால் மண்வளம் காக்கப்பட்டு நிலையான மகசூல் கிடைக்கும்.

ரகங்கள்

  • தக்கை பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை சிறந்த பசுந்தாள் உரப்பயிர்களாகும்.
  • இப்பயிர்களை நட்ட 45-வது மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்க முடியும்.

விதை உற்பத்தி

  • ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் 50 கிலோ வரை தக்கை பூண்டு விதை சிபாரிசு செய்யப்படுகிறது.
  • ஆனால் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு 25 கிலோ விதை போதுமானது.

விதை நேர்த்தி

  • தக்கைப்பூண்டு விதையை லேசாக சொரசொரப்பான தரையில் தேய்த்து விதைப்பு செய்யலாம்.
  • அல்லது ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் விதைப்பு செய்யலாம்.
  • மணிலா அகத்தி விதையை ஒரு கிலோ விதைக்கு 100 மில்லி அடர் கந்தக அமிலத்தில் கலந்து 10 நிமிட நேரம் வைத்திருந்து பின் 10 அல்லது 15 தடவை நல்ல நீரில் கழுவி விதைப்பு செய்யலாம்.

உர நிர்வாகம்

  • தக்கைப்பூண்டு மற்றும் மணிலா அகத்தியும் மணிச்சத்தை அதிகம் விரும்பும் பயிர்களாகும்.
  • ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ மணிச்சத்தை விதைப்பின்போது இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
  • பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசலை 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
  • ஆரம்பத்தில் இச்செடியின் வளர்ச்சி மிதமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு மேல் வெகு அடர்த்தியாக வேகமாக வளரும் தன்மை உடையது.
  • கிளைப்புகளை அதிகரிக்க, 30 முதல் 40 நாள்களுக்கு நுணி கிள்ளுதல் அவசியம்.

நீர் நிர்வாகம்

  • மண் அமைப்பை பொறுத்தும் மழையை பொறுத்தும் நீர் பாய்ச்சுதல் அவசியம். 1
  • 5 நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

பூச்சிகளை கட்டுப்படுத்துதல்

  • பூத்து காயாகும் பருவத்தில் பூச்சித் தாக்குதல் இருக்கும். மானோகுரோட்டாம்பாஸ் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • பொதுவாக மணிலா அகத்தியையும் தக்கைப் பூண்டையும் நோய்கள் பாதிப்பதில்லை.

அறுவடை

  • இப்பயிர் 120 நாள்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.
  • செடியை அறுவடை செய்து கட்டுக்கட்டாக கட்டி களத்தில் செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும்.
  • பின் 5 நாள்கள் கழித்து மாடு அல்லது டிராக்டர் கொண்டு போரடித்து விதையை பிரித்தெடுக்கலாம்.
  • விதையை நன்றாக சுத்தம் செய்து காயவைத்து 12 முதல் 13 சதவீத ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மே, ஜூன் மாதத்தில் விதைப்பு செய்கிற தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி விதை மகசூல், ஒரு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் முதல் 2,250 கிலோ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *