மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ. 15-ம் தேதி நடைபெறும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு 2013 நவ. 15-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில், மண்புழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள், உரம் தயாரிக்க தேவையான பொருள்கள்,  குழிமுறை மற்றும் வர்த்தக ரீதியாக குவியல் முறையில் மண்புழு உர உற்பத்தி, மண்புழு உரம் பிரித்தெடுத்தல், உரத்தின் பயன்கள் குறித்து காணொலி காட்சி மற்றும் செயல்விளக்கங்கள் மூலம் விளக்கப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் நேரில் அல்லது 04328 293592,  04328293251, 08939003569 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Related Posts

ஒரு ரூபாயில் ஒரு கிலோ மண்புழு உரம்!... மண் புழு உரம், இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்...
மண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்... பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் ...
மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி... "நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 ச...
மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி... நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *