வர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி

போஸ்பேட் உரம் (Phosphate) இப்போது ஒரு முக்கியமான உரமாகும். பசுமை புரட்சியின் பொது இந்த உரம் பிரபலப்படுத்தப்பட்டது. இந்த உரத்தை நிலத்தில் பயன் படுத்தினால் விளைச்சல் நன்ற அதிகரிக்கும்.

மண்ணில் இருந்து எடுக்க படும் Rock Phosphate தாது மூலம் இது பிரிக்க படுகிறது. இந்த போஸ்பேட் உள்ள தாதுக்கள் உலகத்தில் 65 பில்லியன் டன்கள் உள்ளன. அவற்றில் 16 பில்லியன் டன்கள்  மட்டுமே நிலத்தில் இருந்து எடுக்க முடியும். இதில் பெரும் பகுதி ஆப்ரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டில் உள்ளது. மீதி தாதுக்கள் அமெரிக்காவிலும், சீனாவிலும் கிடைகின்றன.

இந்தியாவில் இந்த தாதுக்கள் இல்லை. எல்லா போஸ்பேட்இறக்குமதி செய்தே உரம் தயாரிக்கிறோம்.
இதில் என்ன என்கிறீர்களா?

உலகத்தில் ஒவ்வொரு வருடமும் 160 மில்லியன் டன் விவசாயத்ரிகு பயன் படுகிறது. இதே அளவில் செலவழித்தால், 2030 வருடம் உலகத்தில் உள்ள எல்லா போஸ்பேட் குறைய ஆரம்பிக்கும் (Peak production).

நம் நாட்டில் போஸ்பேட் தாதுக்கள் இல்லாததால் நாம நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும். இதை போஸ்பேட் நெருக்கடி (Phosphate Crisis) என்று கூறுகிறார்கள்.

குறைந்து கொண்டே வரும், மீதி இருக்கும்  போஸ்பேட் தாது எல்லா நாடுகளும் போட்டி போடும். இதனால் விலை ஏறும்.

இப்போதே, நம் நாட்டில், உரத்திற்கான மானியத்தை குறித்த வுடன், போஸ்பேட் உரம் விலை தாறு மாறாக ஏறி இருக்கிறது.

இதற்கு எல்லாம் ஒரே பதில் இயற்கை விவசாயம் மட்டுமே..

போஸ்பேட் நெருக்கடி பற்றி இங்கே மேலும் தெரிந்து கொள்ளலாம்:

1. Upcoming Phosphate Crisis

2. http://phosphorusfutures.net/

Related Posts

மரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்... வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை ப...
பயிர்களுக்கு உர டீ! மனிதர்கள் டீ குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது என்ற...
சரத் பவரும் விவசாய துறையும் மதிய வேளாண்மை துறை மந்திரி சரத் பவர் பிரதம மந்திரி...
உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை... தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு வி...

One thought on “வர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *