விலை உயர்வால் 80 லட்சம் டன் உரம் தேக்கம

நடப்பு நிதியாண்டின் (2013) இறுதியில், 80 லட்சம் டன் உர வகைகள் தேக்கமடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பருவமழை பொய்த்ததால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மானியம்இந்நிலையில், மத்திய அரசு, பல உர வகைகளுக்கு, அளிக்கப்பட்டு வந்த மானியத்தை குறைத்துஉள்ளது.

இது போன்ற காரணங்களால், நாடு தழுவிய அளவில், விவசாயிகள் உரம் வாங்குவதை வெகுவாக குறைத்துள்ளனர்.

இதனால், உரத் துறை நிறுவனங்கள் பாதிப்படையும் என்பதுடன், ஒட்டு மொத்த அளவில், வேளாண் உற்பத்தியும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2013 ஏப்ரல் 1ம் தேதி வரையிலுமாக,டீ.ஏ.பி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், டை அம்மோனியம் பாஸ்பேட் உர இருப்பு, 31 லட்சம் டன்னாக இருக்குமென, தெரிகிறது.

இதில், 6 லட்சம் டன் உர நிறுவனங்களிடமும், மீதமுள்ள, 25 லட்சம் டன், உர வினியோகஸ்தர்களிடமும் இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் ஆகியவற்றை உள்அடக்கிய காம்ப்ளக்ஸ் உரத்தின் இருப்பு, 24 லட்சம் டன்னாக இருக்கும். காம்ப்ளக்ஸ் உரம்இதில், 4 லட்சம் டன் காம்ப்ளக்ஸ் உரம், நிறுவனங்களிடமும், 20 லட்சம் டன் வினியோகஸ்தர்களிடமும் விற்பனையாகாமல் இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட உர வகைகள் தவிர, எம்.ஓ.பி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், முரியேட் ஆப் பொட்டாஷ் உர இருப்பு, 15 லட்சம் டன்னாக இருக்கும். இதில், 5 லட்சம் டன் பல்வேறு துறைமுகங்களிலும், மீதமுள்ள உரம், நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடமும் இருக்குமென, தெரிகிறது.

அதேசமயம், நடப்பு நிதிஆண்டின் துவக்கத்தில், 30 ஆயிரம் டன் அளவிற்கே உர வகைகள் இருப்பு இருந்தன.

பருவமழை பொய்த்து போனதாலும், மத்திய அரசின், ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானிய கொள்கையால், உரங்களின் விலை உயர்ந்துள்ளதாலும், அவற்றின் தேவை குறைந்துள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தான், வரலாறு காணாத வகையில், விற்பனையாகாத உர கையிருப்பு அதிகரித்து உள்ளதாக, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சில்லரை விற்பனைகடந்த 2011ம் ஆண்டு, ரபி பருவம் முதல், சில்லரை விற்பனையில், ஒரு டன் டீ.ஏ.பி., விலை, 18,200 லிருந்து, 24 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது.

அது போன்று, ஒரு டன் எம்.ஓ.பி., விலை, 12 ஆயிரத்தில் இருந்து, 17 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது.

“சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்’ விலை, 4,800 லிருந்து, 7,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. அது போன்று, காம்ப்ளக்ஸ் உரம் (10:26:26) 16 ஆயிரத்தில் இருந்து, 22 ஆயிரம் ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச உர உற்பத்தியாளர்கள், கூட்டணி அமைத்துக் கொண்டு உரங்களின் விலையை உயர்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்த விலை உயர்வால், அரசு உட்பட, இந்திய நிறுவனங்கள் உரம் வாங்குவதை குறைத்து விட்டன. இதன் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் தற்போது உரங்களின் விலை, ஓரளவு குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, 580 டாலராக இருந்த ஒரு டன், டீ.ஏ.பி., உரத்தின் விலை, தற்போது, 520 டாலராக குறைந்துள்ளது. பாஸ்பேட் விலையும் குறைந்துள்ளது. இது, மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்முதல் இதனால், சகாயமான விலையில், சிறிய அளவிலான உர இறக்குமதி ஒப்பந்தங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 56 ஆக இருந்த போது, உரங்களை கொள்முதல் செய்த பெரிய நிறுவனங்களுக்கு, இது இடர்பாடாக இருக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *