ஹியூமிக் அமிலம் பயன்கள்

ஹியூமிக் அமிலம் (Humic acid) என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவை.

 • இந்த அமிலத்தை களிமண்ணில் தெளிக்கும்போது அது மண்ணை இலகுவாக மாற்றி அதன்மூலம் நீர் உட்கிரகிக்கும் திறனையும் ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
 • மணற்பாங்கான இடத்தில் தெளிக்கும்போது அதனுடன் தேவையான அங்ககப் பொருட்களைச் சேர்த்து நீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது.
 • இதன்மூலம் மண்ணிலிருந்து சத்துக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
 • மண்ணில் தாவரத்திற்கு தேவையான சத்துக்களைதாவரம் உட்கொள்ளும் வகையில் எளிமையாக மாற்றுவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
 • நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு ஹியூமிக் அமிலம் உணவாகிறது.
 • நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது.
 • ஒரு ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் அமிலத்தை 40லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் மண்ணில் தெளிக்கலாம்.
 • பயிர்கள் மேல் தெளித்தல்:
 • ஒரு ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் ஹியூமிக் அமிலத்தை 20-40 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் கொண்டு பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும்.
 • ஹியூமிக் அமிலத்தின் முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே ஆகும்.
 • ஹியூமிக் அமிலம் சந்தையில் உள்ள அனைத்து அங்கக உரக்கடைகளிலும் கிடைக்கிறது.
 • 30 லிட்டர் சுமார் 16-20 ரூபாய் என்ற அளவில் 25 லிட்டர் கேனாகக் கிடைக்கிறது.

(தகவல்: முனைவர் மு.பவித்ரா, முனைவர் எஸ்.சுந்தரவரதன், முனைவர் எஸ்.பார்த்தசாரதி, பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால்.
போன்: 04368261372

நன்றி: தினமலர்

Related Posts

மண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம்... மண்புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, க...
இயற்கை உர உற்பத்தி, மக்காசோள இலவச பயிற்சிகள்... காஞ்சீவரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல...
பயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி... பயோ ஆக்சி என்றால் என்ன?இவை இயற்கையாக ஆக்சிஜன் வ...
உர செலவை குறைக்க அசோலா கோபி அருகே நம்பியூரில் உர செலவை குறைக்க அசோலாவை உற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *