நல்ல மகசூல் கொடுக்கும் எள்

எண்ணெய் வித்துப் பயிரான எள், வறட்சியை தாங்கி வளரும் இயல்புடையது. இது, செம்மண், வண்டல் மண் நிலங்களில் நன்கு வளரும்.
விதைத்ததில் இருந்து, மூன்று மாதத்தில் அறுவடைக்கு வருகிறது.
வறண்ட கால நிலை நிலவும் கோடை காலம் எள் சாகுபடிக்கு ஏற்றது.
விவசாயிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல், நல்ல வருமானம் தரக்கூடியது.

பொங்கலூர் பகுதியில், கடந்த மார்கழி பட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, அறுவடை செய்யப்படு கிறது. இப்பகுதியில், பெரும்பாலான விவசாயிகள், கருப்பு ரக எள் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இப்பகுதியில் விளையும் எள், காங்கயம், வெள்ளகோவில், ஈரோடு பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ சராசரியாக 50 ரூபாய்க்கு விலை போகிறது.

விவசாயிகள் கூறுகையில், ”

  • எள்ளை அடர்த்தியாக விதைக்கக் கூடாது.
  • செடிகள் அதிகமாக இருந்தால், மகசூல் குறைந்து விடும்.
  • நல்ல முறையில் பராமரித்தால், ஏக்கருக்கு நான்கு குவிண்டால் மகசூல் கிடைக்கும்.
  • இதற்கு மற்ற பயிர்களைபோல் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.
  • ஆனால், ஐந்து ஆண்டுக்கு முன் விற்பனையான விலையே இன்றும் தொடர்கிறது. விலைவாசி உயர்ந்துள்ளபோதிலும் எள் விலை உயராமல் உள்ளது,’ என்றனர்.

நன்றி: தினமலர்

Related Posts

எள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள்... மாசிப்பட்ட எள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி சேத...
இறவை எள் சாகுபடிக்கு ஆலோசனைகள்... மாசிப் பட்ட இறவை எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவ...
கோடையில் பலன் தரும் எள் சாகுபடி... எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தம...
எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி... எள் பயிரில் நல்ல லாபம் பெற அறுவடைக்கு பின் நேர்த்த...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *