கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்

கத்தரியை பயிரிட்டு நன்கு பராமரித்தால் 150-160 நாள்கள் வரை ஹெக்டேருக்கு 70 டன் வரை மகசூல் பெறலாம் என்று சிவகங்கை தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்தரி ரகங்கள்

  • ரவையா, அர்கா நவநீத், பூசா அன்மமால், கோ.பி.எச் 1, அஸ்பாரா, என்.எஸ்.1720, சாயா, நவ்கிரான் சப்பால், சியாமல், விஜய் ஆங்கூர் ஆகிய ரகங்கள் பயிரிட ஏற்றவையாகும்.

பயிரிடும் முறை

  • கத்தரி பயிரிட மே-ஜூன், அக்டோபர்-நவம்பர், ஜனவரி-பிப்ரவரி ஆகிய பருவங்கள் சிறந்தவை.
  • ஒரு ஹெக்டேர் அளவில் பயிரிட 100 கிராம் போதுமானது.
  • விதைகளை வரிசைக்கு வரிசை 75 செ.மீ., செடிக்கு செடி 60 செ.மீ என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • பின்னர் அடியுரமாக ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே 100:150:100 கிலோ வீதம் இட வேண்டும்.
  • மேலுரமாக விதைத்த 30 நாள்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து, பின் 60 நாள்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

  • காய் துளைப்பான் மற்றம் தண்டு துளைப்பான் பூச்சிகள் தாக்கினால் ஒரு லிட்டர் நீரில் எண்டோசல்பான் 2 மி.லி. மற்றும் 2 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பச்சை தத்துப்பூச்சி, சாம்பல் கூன்வண்டு, வெள்ளை ஈ தாக்குதல் தெரிந்தால் இமிடாகுளோபிரிட் மருந்தை ஒரு லிட்டர் நீரில் 0.5 மி.லி., மற்றும் 2 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

நோய்கள்

  • சிற்றிலை நோய் : புதிதாக வரும் இலைகள் சிறுத்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இதை கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும். ஒரு லிட்டர் நீரில் மீதைல்டெமட்டான் 2 மி.லி., அல்லது டைமெத்தோயேட் 2.5 மி.லி. கலந்து கை தெளி்ப்பான் மூலம் தெளித்து நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • இலைப்புள்ளி நோய் : இலைகளின் மேல் வட்ட வடிவ சிறிய புள்ளிகள் காணப்படுவது இதன் அறிகுறிகளாகும். இதற்கு ஒரு லிட்டர் நீரில் மேங்கோசெப் 2 கிராம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

நன்றி: தினமணி

கத்திரிக்காய் சாகுபடி பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கவும்

Related Posts

சித்திரையில் கொழிக்கும் கத்தரி... சத்துக்களை அள்ளித்தரும் காய்கறிகளுள் கத்தரிக்காயும...
கத்தரி சாகுபடி விவசாயிகள் தற்போதைய பருவத்துக்கு ஏற்ற தோட்டப...
புதிய கத்திரி வகைகள் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகை...
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை... கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *