சித்திரையில் கொழிக்கும் கத்தரி

சத்துக்களை அள்ளித்தரும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. வண்டல் மண்ணில் வளமாய் வளரும் பயிர்களில் முக்கியமானது. நீர்சத்து அதிகம் கொண்டது, வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 அடங்கியது.
வெள்ளை, ஊதா, பச்சை என பல நிறங்களில் காணப்படுகிறது. உடல் பருமனை குறைப்பதில் கத்தரிக்காயின் பங்கு மகத்தானது.

மருத்துவ மகத்துவம் மிக்க கத்தரிக்காயை அதிகம் பேர் விரும்புகின்றனர். அதிக நாள் கெடாத காய்கறிகளில் கத்தரியும் ஒன்று. ”லாபம் தரும் விவசாய தொழிலாக கத்தரிக்காய் சாகுபடி இருப்பதாக,” காரைக்குடி கழனிவாசல் விவசாயி எஸ்.சிவராஜ் கூறுகிறார்.

Courtesy: Dinamalar
 • ஒரு ஏக்கரில் நாட்டு கத்தரி நட்டுள்ளேன். குழித்தட்டு முறையில் நாற்று வளர்த்து, 25 நாளுக்கு பின் நிலத்தில் நடுவோம்.
 • 60 முதல் 65 நாளில் பலன் கொடுக்க ஆரம்பித்து விடும். நான்கு முதல் ஐந்து மாதம் வரை காய்ப்பு இருக்கும்.
 • வாரத்துக்கு ஒரு முறை 150 முதல் 200 கிலோ வரை காய் பறிக்கலாம்.
 • வியாபாரிகளிடம் கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கிறேன். வயலுக்கு வந்து நேரடியாக ஒரு சிலர் கொள்முதல் செய்கின்றனர்.
 • ஆறு மாதத்தில் 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு போக மீதி லாபமாக நிற்கும்.
 • மேலாண்மை முறையை பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் வளர்ச்சி ஊக்கியான ‘சைட்டோசெம்’ தெளிப்போம்
 • .இயற்கை உரமான மாட்டு எரு அதிகளவில் பயன்படுத்துகிறோம்.
 • 15 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும்.
 • மூன்று அடிக்கு ஒரு செடி வைக்க வேண்டும்.
 • 20 நாளுக்கு ஒரு முறை மெஷின் மூலம் களை எடுக்கப்படுகிறது.
 • விவசாயத்தை பொறுத்தவரை ஈடுபாட்டுடன் உழைத்தால் கை நிறைய லாபம் அள்ளலாம் என்றார்.

தொடர்புக்கு 09443735894

நன்றி: தினமலர்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை முறை கத்தரி சாகுபடி இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத...
கத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர்... கத்திரி ஒரு பிரச்னையான பயிர் - நன்கு சொத்தை இல்...
கத்திரி இயற்கை வேளாண்மையில் சாதிக்கும் விவசாயி... ராஜபாளையம் இயற்கை உழவர் மணியின் முறைப்படி கத்தரி ந...
கத்திரி, தக்காளி, மிளகாய் சாகுபடி பயிற்சி... "கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் சாகுபடி தொழில்நு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *