கரும்பில் இயற்கை பூச்சி மேலாண்மை

கரும்பு நுனிகுருத்துப் புழு:
மேலாண்மை:

 • கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.நடவு : டிசம்பர் – ஜனவரி
 • இடைப்பயிர் (ஊடுபயிர்) : தக்கைப் பூண்டு
 • தேவையான நீர்ப் பாசனம்.
 • காய்ந்த நடுக்குருத்தினை எடுத்து அழித்தல்.
 • ஸ்டம்பியோப்சிஸ் இன்பரன்ஸ் என்ற ஒட்டுண்ணியை ஹெக்டருக்கு 125 (பெண்) என்ற எண்ணிக்கையில் வயலில் விடவும்.

இடைகணுப் புழு:
மேலாண்மை:

 • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 975, கோ 7304, மற்றும் கோ 46
 • முட்டைகளை சேகரித்து அழித்தல்
 • சோகை உரிப்பு : 150 மற்றும் 210 வது நாட்களில்
 • தேவைக்கு அதிகமான உர பயன்பாட்டைத் தவிர்த்தல்.
 • முட்டைகளைத் தாக்கும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை 15 நாட்களுக்கு ஒரு முறை நட்ட 4 ம் மாதத்திலிருந்து 6 முறை ஹெக்டருக்கு 2.5 சிசி என்ற அளவில் பயன்படுத்துதல்.

மேல் தண்டுதுளைப்பான்:
மேலாண்மை:

 • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 419, கோ 745, மற்றும் கோ 6516
 • தாங்கும் திறனுள்ள இரகங்கள்: கோ 859, கோ 1158, மற்றும் கோ 7224
 • முட்டைகளை சேகரித்து அழித்தல்
 • முட்டை ஒட்டுண்ணி: டிரைக்கோகிரம்மா மைனூட்டம்
 • புழுப் பருவ ஒட்டுண்ணி: கொனியோகஸ் இன்டிகஸ்
 • கூட்டுப்புழு ஒட்டுண்ணி: டெட்ராடிக்கஸ் அய்யாரி

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

 

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நவீன கரும்பு சாகுபடி: குறைந்த நீரில் அதிக மகசூல்... குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபய...
வறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிகள்... கரும்புப் பயிருக்கு வறட்சி மேலாண்மை முறைகள் ...
கால்நடைகளுக்கு கரும்புத்தோகை தீவனம்... கால்நடைகளுக்கு கரும்புத் தோகை தீவனம் வழங்கலாம் என ...
கரும்பைத் தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்... பூச்சி தாக்கும்போது கரும்பினை முறையாக பராமரிக்காவி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *