கரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி?

அறிகுறிகள்:

 • இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல்போன்ற இலைகள் தழையும்.
 • இது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய். இவ்வாறு தழையும் இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
 • இதுபோன்று பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும்.
 • இந் நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சுயிரி பரவுகிறது. அசுவினி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.

தடுப்பு முறைகள்:

 • நோய்பட்ட கரும்புச் செடிகளை அகற்ற வேண்டும்.
 • முன் சிகிச்சையாக கரணைகளை (ஆரோக்கிய மானவை) வெந்நீரில் (52 டிகிரி செ) வைக்கலாம்.
 • இந்த முறையை நாற்று நடுவதற்கு ஒரு மணி நேரம் முன் செய்தல் வேண்டும்.
 • அல்லது கரணைகளை 54 டிகிரி செ. வெப்ப காற்றில் எட்டு மணி நேரம் வைத்து முன்சிகிச்சை செய்து பின்னர் நடவேண்டும்.
 • எதிர்ப்புசக்தி கொண்ட பயிரினை பயிரிடுதல் சிறந்த முறையாகும்.
 • நடவு செய்யும் நாற்று நோயற்றதாக இருத்தல் மிக அவசியம்.
 • பயிர் தூய்மை மிக அவசியம். தோகை (சோகை) உரித்தல், அதிகப்படியான நீரை வடித்தல் நன்று.
 • நோய் பாதிக்கப் பட்ட வயல்களில் கட்டைப்பயிர் வளர்த்தலை தவிர்க்கவும்.
 • பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்.
 • பயிரிடுவதற்கு முன் விதைநேர்த்தி சிகிச்சையை 520சி.யில் முப்பது நிமிடத்திற்கு பின்பற்றிட வேண்டும்.
 • கரும்பில் இடைக்கலப்பு முறையை பின்பற்றிடல் வேண்டும். இதன்மூலம் அந்தந்த இடத்திற்கு ஏற்ப, திறன்கொண்ட பயிர்களை வளர்க்கமுடியும்.
 • துத்தநாகச் சத்து, இரும்புச்சத்து பற்றாக் குறையினால் பயிர்களின் இலை மஞ்சளாகி வெளுத்து காணப்படும்.இதற்கு எக்டேருக்கு 2 கிலோ பெரஸ் சல்பேட், ஒரு கிலோ துத்தநாக சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
 • கரும்பு பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், வேர்களை சுற்றி மண்ணில் தங்கி வளர்ந்து காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும்.
 • நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் ஒரு கிலோ கம்போஸ்டு அல்லது தொழு உரத்துடன் கலந்து பாஸ்பேட் உரத்தை இட்டபிறகு, நடவுகால்களில் கரும்பு நடுவதற்கு முன் இடவேண்டும்.
 • கரும்புத் தோகையைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரித்து மண்ணின் கரிம மக்கை மேம்படுத்தலாம்.
 • பயிர் சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை அறிந்து உரம் இடவேண்டும்.

தகவல்: எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656. அலைபேசி எண்: 09360748542.

நன்றி: தினமலர்

Related Posts

கரும்பு தோகை கால்நடை தீவனம் "கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையை, கரும்பு  தோகை ...
கரும்புகளுக்கு இடையே தக்கைப் பூண்டு... கரும்பு பயிருக்கு தழைச்சத்து கிடைக்க வேண்டி, தக்கை...
கரும்பு சாகுபடியின் கசப்பான உண்மைகள்... கரும்பின் இனிப்பை சுவைக்காதவர் யாரும் இருக்க முடிய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *