கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி

கரும்புத் தோகை கழிவு உரம் தயாரிக்கும் முறை:

 • நிழல் தரும் வசதியான இடத்தில் 15மீ நீளம், 3மீ அகலம், 1மீ ஆழம் உள்ள குழியை ஏற்படுத்த வேண்டும்.
 • இந்த குழியில் சுமார் 500கிலோ கரும்புத் தோகையைப் பரப்ப வேண்டும்.
 • இதன் மீது ஆலைக்கழிவினை 5செ.மீ அளவிற்கு பரப்ப வேண்டும்.
 • இதன் மீது காளான் வித்து,யூரியா,மாட்டுச்சாணம் இவைகளை நீரில் கரைத்து இந்தக் கரைசலை இதன் மீது ஒரே சீராகத் தெளிக்க வேண்டும்.
 • இவ்வாறு மாற்றி மாற்றி தோகை,பூஞ்சாணம், சக்கரை ஆலைக்கழிவு ஆகியவற்றை உபயோகித்து 10 முதல் 15 அடுக்குகள் வரை தோகையை குழியில் பரப்பலாம்.
 • ஒவ்வொரு அடுக்கும் நன்கு நன்கு நனையும்படி யூரியா, காளான்வித்து, மாட்டுச்சாணம் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும்.
 • கடைசி அடுக்கின் மீது 15செ.மீ கனத்திற்கு மண் கொண்டு மொழுகி குவியல் முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
 • வாரத்திற்கு ஒரு முறை குவியல் நன்கு நனையும்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
 • குவியல் ஈரமாக இருந்தால் நுண்ணுயிர்கள் பெருகி தோகை மக்குவது துரிதமாகும்.
 • மூன்று மாதங்கள் முடிந்து தோகை குவியலைப் பிரித்து நன்றாக கலந்து மீண்டும் குவியலாக்க வேண்டும்.
 • நான்காவது மாதத்தில் தோகை நன்கு மக்கி ஊட்டமேற்றிய தொழுஉரமாக மாறும்.
 • இவ்வாறு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் எருவில் 0.80 சதம் தழைச்சத்தும், 0.2 சதம் மணிச்சத்தும், 0.70 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. இது ஒரு சிறந்த இயற்கை உரமாகும்.

தகவல்: வேளாண்மைத்துறை, உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கரும்பில் தாளை பூத்தலைக் கட்டுப்படுத்துவது எப்படி?... கரும்பில் நுண்ணூட்டப் பற்றாக்குறையால் ஏற்படும் பயி...
இயற்கை முறையில் தேனி விவசாயி செய்யும் புதுமைக் கரும்பு சாகுபடி!... தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி ...
கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை... கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்...
கரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி?... ""கரும்பு பயிரில் ஏற்படும் களைகளை கட்டுப்படுத்த கர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *