கரும்பு தோகை இயற்கை உரம

கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்களில் எரிக்காமல், தூளாக்கி மூடாக்கு செய்வதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது என்று வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

 • கரும்பு அறுவடை முடிந்தவுடன், டிராக்டரில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் கரும்பு தோகையினை தூளாக்கி வயல்களில் பரப்பினால் சிறந்த மூடாக்காக செயல்பட்டு, மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படும்.
 • மேலும், தூளாக்கப்பட்ட கரும்பு தோகை விரைவில் மக்கி இயற்கை உரமாக பயிருக்கும் கிடைக்கும். இயற்கை உரங்கள் அரிதாக உள்ள இந்த சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
 • தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.

நன்றி:தினமணி 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்... கரும்பில் இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு ...
கரும்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்... கரும்பில் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் முறைகளை சர்க்...
கரும்பு தோகை கால்நடை தீவனம் "கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையை, கரும்பு  தோகை ...
கரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்... கரும்பு பயிரில் இடைக்கணு, நுனிக்குருத்து மற்று...

3 thoughts on “கரும்பு தோகை இயற்கை உரம

 1. gobi says:

  ஐய. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.இதை வாங்க எந்த முகவரியை அனுக வேண்டும்.

  • gttaagri says:

   Ayya,
   nandri. Pasumai tamilagam ippodu Android app aaka kidaikiradhu. idhai kondu ungal mobile phonil padikkalam.
   Android phonil Google Play sendru Pasumai endru thedi install seiyyavum
   nandri
   ungal admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *