கரும்பைத் தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்

பூச்சி தாக்கும்போது கரும்பினை முறையாக பராமரிக்காவிட்டால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

கரும்பை பொறுத்தவரை குருத்து துளைப்பான், வெள்ளை ஈ, வேர்புழு, இலை தத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.

குருத்து துளைப்பான்:

  • இவ் வகையான தாக்குதலுக்கு ஆளாகும்போது கரும்பின் இளம் குருத்தை புழுக்கள் சாப்பிடும். இதனால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.
  • இப் புழுக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
  • இதனை தடுக்க தேவையான அளவு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நடவு செய்து 6 வாரங்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.
  • தாக்கப்பட்ட நடுக்குறுத்துக்களை சேகரித்து அகற்ற வேண்டும்,
  • குளோர்பைரிபாஸ் 1000 மி.லி தண்ணீரில் கலந்து தெளித்து குருத்து துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈ:

  • இந்த தாக்குலுக்கு ஆளாகும்போது இலையில் உள்ள சாறுகளை பூச்சி உறிஞ்சும். இதனால் இலை பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • இப் பூச்சிகளை கட்டுப்படுத்த தேவைக்கு அதிகமாக பசுந்தால் உரங்களை பயன்படுத்தக் கூடாது,
  • ஒரு ஹெக்டருக்கு மானாகுரோடாபாஸ் 2 லிட்டர் தெளித்து வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.

வேர்ப் புழு:

  • இப் புழு கரும்பை வேர் வழியாக உள்ளே சென்று தாக்கும். இத் தாக்குதலுக்கு ஆளான கரும்பில் தண்டு காயந்துவிடும்.
  • இலைகளும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • இவ்வகை பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைக்க வேண்டும்,
  • தேவையான அளவு மட்டுமே நீர்பாசனம் செய்ய வேண்டும்,
  • பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்,
  • லிண்டோன் எனப்படும் மருந்தை ஹெக்டேருக்கு 50 கிலோ வீதம் வேர் பகுதியில் தூவ வேண்டும். இதன் மூலம் வேர்புழுவை கட்டுப்படுத்தலாம்.

இலை தத்துப்பூச்சி:

  • இவ்வகை பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் அமர்ந்து கொண்டு சாறை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
  • இதனைக் கட்டுப்படுத்த தேவைக்கு அதிகமாக பசுந்தாள் உரங்களை பயன்படுத்தக் கூடாது.
  • விளக்குபொறி அமைத்தும் இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • மாலத்தியான் 2000 மி.லிட்டரை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • இம் மருந்துகளை நடவு செய்து 5 மாதங்கள் கழித்தே பயன்படுத்த வேண்டும்.

கரும்புகளில் முறையாக பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும்போது நல்ல லாபத்தை பெறமுடியும். மேலும் கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு தருவதுடன் தாங்களே சொந்தமாக வெல்லம் தயாரித்தும் கூடுதல் லாபம் பார்க்கலாம் என்று விவசாயத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *