கருவேப்பிலை சாகுபடி

இரகங்கள் : செண்காம்பு, தார்வாடு 1 , தார்வாடு 2.

மண் மற்றும தட்பவெப்பநிலை : சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. வெப்பநிலை 26 முதல் 27 வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப்  பெரிதும் உதவும்.

பருவம் மற்றும் நடவு

பருவம் : ஜூலை – ஆகஸ்ட் மாதம்

 • விதைகளை பறித்த 3-4 நாட்களில் பாலித்தீன் பைகளில் விதைக்கவேண்டும். ஒரு வயதுடைய நாற்றுக்கள் நடவுக்கு உகந்தவை.

நிலம் தயாரித்தல்

 • நிலத்தினை நன்கு உழுது மண்ணைப் பண்படச்செய்தல் வேண்டும்.
 • கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் ஒரு எக்டருக்கு 20 டன் என்ற அளவில் இடவேண்டும்.
 • 1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30x30x30 செ.மீ என்ற அளவில் குழிகள் எடுத்து 2-3 மாதம் கழித்து நடவு செய்யவேண்டும்.
 • குழகளின் நடுவே ஒரு நாற்றினை நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்:

 • நடவு செய்தவுடன் தண்ணீர் பாசனம் செய்யவேண்டும்.
 • உயிா தண்ணீர் மூன்றாவது நாளும் அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

 • களையினை அவ்வப்போது நீக்கவேண்டும்.
 • நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
 • கருவேப்பிலை செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளிவிடுவதன் மூலம் பக்க கிளைகளின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது.
 • ஒரு செடிக்கு 5-6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

செதில் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்

 • கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

 • கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
 • கந்தக மருந்துகளை இப்பயிருக்கு பயன்படுத்தக்கூடாது.

மகசூல்:

முதல் வருடம்ஒரு எக்டரிலிருந்து 250-400 கிலோ தழை
இரண்டாம் வருடம்4 மாதத்திற்கொருமுறை 1800 கிலோ தழை (ஆண்டு ஒன்றுக்கு 5400 கிலோ / எக்டர்)
மூன்றாம் வருடம்5400 கிலோ / எக்டர்
நான்காம் வருடம்3 மாதத்திற்கொருமுறை 2500 கிலோ / எக்டர் (ஆண்டு ஒன்றுக்கு 10,000 கிலோ / எக்டர்)
ஐந்தாம் வருடம்3 மாதத்திற்கொருமுறை 5000 கிலோ / எக்டர் (ஆண்டு ஒன்றுக்கு 20000 கிலோ / எக்டர்)

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

ஆயுள் பயிர் கறிவேப்பிலை! கறிவேப்பிலை இல்லாமல் சமையல் இல்லை என்பதில் சந்தேகம...
அதிக லாபம் தரும் கறிவேப்பிலை! அதிக மருத்துவக் குணங்கள்  கொண்ட கறிவேப்பிலை அதிக ல...
கறிவேப்பிலை சாகுபடி டிப்ஸ் வெப்ப மண்டலப் பயிர்களில் கறிவேப்பிலையும் ஒன்றா...
கருவேப்பிலையில் சாதிக்கும் பெண்... நாம் கறிவேப்பிலையை என்ன செய்வோம்? சமையலில் சுவைக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *