சர்வதேச பூர்வகுடிகள் தினம்

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி ‘சர்வதேச பூர்வகுடிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வுக் கலாசாரம், சுரண்டல், நோய்கள், பொருளாதார வளர்ச்சியின் மீதான அதீத மோகம் போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதிலும் இருக்கும் பல பூர்வகுடி இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனங்கள். வெள்ளையர்களால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளான அந்தப் பூர்வகுடி இனங்களின் அழிவு குறித்து சமீபத்தில் ஒரு புத்தகம் வந்துள்ளது. உலகெங்கும் பூர்வகுடிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்த தருணத்தில், அந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

தேசிய மன்னிப்பு வரலாறு

ஆஸ்திரேலியாவில் 1998-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மே 26-ம் தேதி ‘தேசிய மன்னிப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் வரலாற்றின் மாபெரும் ‘தவறு’ அடங்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அது ஒரு கண்டம். அங்கு வெள்ளையர் வருகைக்கு முன்னால் 3 லட்சம் முதல் 8 லட்சம்வரையிலான எண்ணிக்கையில் பூர்வகுடி மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பூர்வகுடிகளுடன் வெள்ளையர்கள் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பால், பல்வேறு பூர்வகுடி இன மக்கள் வேகமாக உயிரிழந்தனர். இப்படியே விட்டால், ஒரு கட்டத்தில் பல பூர்வகுடி இனங்கள் அற்றுப்போய்விடக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று உணர்ந்த ஆஸ்திரேலிய அரசு, ஒரு திட்டத்தைத் தீட்டியது.

பிரிக்கப்பட்ட குழந்தைகள்

பூர்வகுடிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அவர்களிடமிருந்துப் பிரித்து, குழந்தையில்லாத வெள்ளையர்களுக்குத் தத்துக்கொடுக்கப்பட்டன.

அவ்வாறு தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தைகள் பலவும், வெள்ளையர்களின் வீடுகளில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்வரை, உண்மையான தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தேட எந்த முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது.

இந்தத் திட்டம் ஆஸ்திரேலியாவில் ஒரு சட்டமாகவே இருந்துவந்தது. தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தில் ஒட்டவும் முடியாமல், வெள்ளையர் சமுதாயத்தில் ஒடுக்குதலுக்கு ஆளாகி, உண்மை தெரிந்த பிறகு தங்களுடைய வேர்களைக் கண்டுபிடிக்கவும் முடியாமல், இரு தாய், இரு தந்தை, இரு கலாசாரம், இரு அடையாளம் என மிகக் குழப்பமான ஒரு தலைமுறை 1910-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டுவரை வாழ்ந்துவந்தது.

இந்தத் தலைமுறையை ஆஸ்திரேலியாவில் ‘திருடப்பட்ட தலைமுறை’ (ஸ்டோலன் ஜெனரேஷன்)’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் நிலை

இந்தியாவில் பழங்குடியினர் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

tribals
காடுகளின் இடையே இயற்கையோடு ஒன்றி பேராசை இல்லாமல், நோய் நொடி இல்லாமல் இருக்கும் அவர்களின் வாழவாதரங்கள் திருட படுகின்றன. ஜார்கண்ட், சட்டிஸ்கர் போன்ற மானிலங்களில் காடு இடங்கள் கரி சுரங்கம் எடுப்பதற்காக கொடுக்க பட்டு அவர்களின் இடங்கள் பிடுங்கப்பட்டு அவர்கள் பிச்சை காரர்கள ஆகிறார்கள்.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

பொருளாதாரமும், வளர்ச்சியும் – கேள்வியே கேட்க கூடாத கடவுள்கள். அந்த கடவுளின் பீடத்தில் யாரை வேண்டும் ஆனாலும் பலி கொடுக்கலாம்

இதற்கு ஒரு சாம்பிள் – எசார் நிறுவனம் (Essar) மகான் (Mahan sal forests) காடுகளில் நிலக்கரி எடுக்க காடுகளை அழித்து அங்கே வாழும் பழங்குடி மக்களின் வாழ்கையை கெடுக்க இருக்கும் திட்டம்  பற்றிய ஒரு வீடியோ.

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *