அமெரிக்க பறக்கும் கொடைகானல் காய்கறிகள்

பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்து வந்த கொடைக்கானல் விவசாயிகள், உயர்ரக விவசாயம் மூலம் அமெரிக்காவிற்கு காய்கறி ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை, மன்னவனூர், கீழான வயல், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, போலூர், கூக்கால், பழம்புத்தூர், புதுப்புத்தூர் என கிராமங்களில், கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வந்தனர்.

விளைந்த காய்கறிகளை, மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்புவர்.

இந்நிலையில், 2010 ல், “மேல்மலை கிராம பகுதியில், 500 விவசாயிகளை இணைத்து, 2010 ல் “கொடைக்கானல் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியாளர் சங்கம்’, பொறியாளர் மூர்த்தி என்பவரால் துவக்கப்பட்டது.

இச்சங்கம் மூலம் காய்கறி சாகுபடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.  மூர்த்தி கூறியதாவது:

 

  • கொடைக்கானலில் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டாலும், விவசாயிகளுக்கு குறைந்த விலை தான் கிடைக்கிறது.
  • அப்போதுதான், அமெரிக்காவில் “மெக்டொனால்டு’ கம்பெனி பற்றி அறிந்தோம்.
  • அவர்கள் தயாரிக்கும் “சாண்ட்விச்’ களில் “லெட்டியூஸ் ஐஸ்பெர்க்’ என்ற முட்டைக்கோஸ் போன்ற காய்கறி இலைகளை பயன்படுத்துவது தெரியவந்தது. அந்த காய்கறி இலைகள் அதிக சத்துக்கொண்டது.
  • “லெட்டியூஸ் ஐஸ்பெர்க்’ மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக் கூடியது.
  • முதன்முறையாக, கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி ஆகிய இடங்களில், சோதனை முயற்சியாக பயிரிட்டோம்.
  • இவை, 58 நாட்களில் முழுமையான வளர்ச்சி கண்டதோடு, “உயர் ரகமாகவும், தரமாகவும் உள்ளது’ என, ஜெர்மன் விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் இப்புதிய பயிர் சாகுபடி, அமோக வெற்றி பெற்றுள்ளது.

கவுஞ்சியை சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:

  • கேரட் மகசூல் எடுக்க, 90 நாட்களாகும். உருளைக்கிழங்கு 120 நாட்கள். பூண்டு 150 நாட்கள்.
  • ஆனால், “லெட்டியூஸ் ஐஸ்பெர்க்’ ரகம், 58 நாட்களில் மகசூல் கிடைத்துவிடுகிறது.
  • கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை, மதுரையிலுள்ள மொத்த வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டியதுள்ளது.
  • ஆனால், “லெட்டியூஸ் ஐஸ்பெர்க் பூத்’ தாவரத்தை, பெங்களூரு அனுப்பி பதப்படுத்தி, பேக்கிங் செய்து, அமெரிக்கா அனுப்புகிறோம். வழக்கமான கிடைக்கும் லாபத்தை விட, 25 சதவீதம் கூடுதலாக கிடைக்கிறது.

இவ்வாறு முருகன் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *