காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை

இந்தியாவில்  காய்கறி உற்பத்தி உலகளவில் 2 ம் இடத்தில் உள்ளது. சாகுபடி பரப்பு குறைவு, நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை தடுக்க பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி கழகம் சிறப்பு நுண்ணூட்ட கலவையை கண்டுபிடித்துள்ளது. இதனை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய் பயிர்களுக்கு 5 கிராம், மிளகாய், கத்தரி, வெங்காயத்திற்கு 3 கிராம், பீன்ஸ், தட்டைபயறு, வெண்டைக்கு 2 கிராம், பீர்க்கு, பாகல், புடலை, தர்பூசணி, சுரைக்காய்க்கு ஒரு கிராம் பயன்படுத்தினால் போதும். அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:

நுண்ணூட்ட கலவையை இலைவழியாக தெளிக்கும்போது அனைத்து நுண்ணூட்ட சத்துகளும் பயிர்களுக்கு கிடைக்கும்.இதனால் மகசூல் அதிகரிக்கும். நடவு செய்த 30 நாட்கள் அல்லது 45 வது நாளில் தெளிக்கலாம்.அதன்பின் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துடன் சேர்த்து தெளிக்க கூடாது.ஒரு கிலோ ரூ.150 க்கு தருகிறோம், என்றனர்.

தொடர்புக்கு: 04512452371

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கோவைக்காய் சாகுபடி துரிதமாக படர்ந்து வளரக்கூடிய காய்கறியான கோவைக்காய்...
குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு... தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முற...
நாமே உருவாக்கினால் என்ன! காய்கறிகளின் விலை உயர்வை சமாளிக்க, வீட்டிலேயே தோட்...
காய்கறி விதைகள் விற்பனை பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி ந...

One thought on “காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *