பனியில் காய்கறிகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்

பனிக்காலத்தில் காய்கறிகள் பாதிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீசனுக்கேற்றவாறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதனால் ஏற்படும் தட்டுபாட்டால் விலை உயர்கிறது. ஆண்டு முழுவதும் அனைத்து காய்களையும் சாகுபடி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

  • பனிக்காலங்களில் தக்காளி, பீன்ஸ், பட்டாணி போன்றவை பாதிக்கப்படுகின்றன. இமாச்சலபிரதேசம் நானியில் உள்ள தோட்டக் கலை பல்கலையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ‘டிரேயில்’ காய்கறிகளின் விதைகளை ஊன்றி அவற்றை 2 அடி ஆழம் உள்ள குழிக்குள் வைக்க வேண்டும்.
  • 200 முதல் 250 மைக்ரான் எடையுள்ள பாலிதீன் பைகளால் மூட வேண்டும்.
  • இதன்மூலம் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
  • இந்த தொழில்நுட்பம் குறித்து இமாச்சல பிரதேசத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த வேளாண்மை பல்கலை ஆராய்ச்சி மையங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • காந்திகிராம பல்கலை வேளாண் ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:’புதிய தொழில்நுட்பத்திற்கு அதிக செலவாகாது. இதனால் அனைத்து வகை காய்கறிகளும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் குறித்து மலைவாழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்,’ என்றார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

காய்கறி மகசூலுக்கு ஏற்ற குழித்தட்டு நாற்றங்கால்... காய்கறி மகசூலைப் பெருக்க குழித்தட்டு நாற்றங்...
ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி... ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப காய்க...
காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி... காய்கறி பயிர்களை தாக்கும் பல வகை சாறு உறிஞ்சும் பூ...
காய்கறிகளை அள்ளித்தரும் மாடித்தோட்டம்... புதுவையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மொட்டை ம...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *