இந்தியாவின் காற்று மாசு அட்லஸ்

இந்தியாவில் காற்றில் உள்ள மாசுக்கள் பற்றி நம் அரசு கவலை படுவதே இல்லை. மண் தூசி, டீஸல் புகை, டிராபிக் ஜாமில் வரும் புகை, தொழிற்சாலைகளால் வரும் புகை  என்ற பல வகை மாசுக்கள் காற்றில் உள்ளன.

இந்த மாசுகளில் இரண்டு வகை. PM 2.5 மற்றும் PM 10 என்று
PM என்றால் பார்டிகிலட் மாட்டர் (Particulate Matter). அதாவது 2.5 மைக்ரோன் அளவிற்கு கீழே உள்ள துகள்கள் மற்றும் 10 மைக்ரோன் அளவு துகள்கள் என்று இரண்டு வகை

உலக ஆரோக்கிய நிறுவனம் (World Health Organization) இந்த வருடம் முதல் முறையாக உலகில் அதிக அளவில் காற்று மாசு உள்ள நகரங்களின் பெயர்களை வரிசை படுத்தி  உள்ளது. இவற்றில் டாப் 20 நகரங்களில், 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!

இந்த வகை சிறிய துகள்கள் காற்றில் இருப்பதால் ஆஸ்த்மா, கான்செர், என பல வகை வியாதிகள் மக்களுக்கு வருகின்றன.

இந்தியாவின் காற்று மாசு அட்லஸ் இப்போது வெளியிட பட்டுள்ளது.

Courtesy: Vox.com
Courtesy: Vox.com

பொதுவாக தென் இந்தியாவை விட வட இந்தியாவில் காற்று மாசு மிக அதிகம்.. அட நம் தமிழ் நாடு வட இந்தியாவை விட தேவலையே என்று எண்ணினால், வதோ ஸ்டாண்டர்ட் படி ஒரு க்யுபிக் மீட்டருக்கு 10க்கும் கீழே PM 2.5 இருக்க வேண்டும். இப்படி இந்தியாவில் இருக்கும் இடங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சில இடங்கள், இமய மலையில் சில இடங்களே!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *