கறவை மாடுகள் நோய் தடுப்பு இலவச பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் குறித்து வருகிற 2013 ஆகஸ்ட் 29-ஆம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மருத்துவர் அனல்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் மின் செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வருகிற 2013ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் குறித்து ஒரு நாள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், மாடுகளைத் தாக்கும் நோய்கள், அவற்றின் தடுப்பு முறைகள், தீவன முறைகள் மற்றும் கருத்தரிக்காமை ஆகியவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விருப்பமுள்ள விவசாயிகள் ஆராய்ச்சி நிலைய தொலைபேசி எண் 04343225105 மூலமோ அல்லது நேரிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வரும் 25 நபர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்

நன்றி தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி?... பால் பண்ணைத் தொழில் மீதான ஆர்வம் விவசாயிகள் மட்டும...
காளான குறித்த இலவசப் பயிற்சி காளானிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயா...
இயற்கை காய்கறிகள் சாகுபடி இலவச பயிற்சி... கடலூர் மாவட்டம் பண்ருட்டி  சக்ரபாணி செட்டியார் கல்...
தீவனப் பற்றாக்குறை: கால்நடைகளுக்கு உணவாகும் கழிவுப் பஞ்சு!... வெள்ளக்கோவில் பகுதியில் தீவனப் பற்றாக்குறையால் கால...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *