மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

 • கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும்.
 • இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும்.
 • இந்த உண்ணிகள் ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும்.
 • இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும்.
 • மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும்.
 • பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும்.
 • எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும்.
 • பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும்.
 • குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.
 • மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும்.
 • ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும்.
 • ஒரு உண்ணி சுமார் 18,000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18,000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும்.
 • எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும்.

(தகவல்: முனைவர் .சௌந்தரராஜன், பேராசிரியர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை-600 007. போன்: 0442530 4000. விரிவு: 2042. மின்னஞ்சல் soundarvet 1970@yahoo.com.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

ஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி... சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 அக்டோப...
முன்னாள் எம்.எல்.ஏ.யின் இயற்கை மாட்டுப் பண்ணை!... ஒரு முழுநேர அரசியல்வாதி, முழுநேரப் பண்...
வெள்ளை, இரும்பு சோளம் – கால்நடைகளுக்கு ‘கோடை’ தீவனம்... தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்கும் வகை...
தீவனப்பயிர்கள புதிய வெளியீடுகள்... வனப்பயிர்களில் புதிய வெளியீடுகள்:கம்பு நேப்பிய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *