ஆடி, புரட்டாசி பட்டங்களுக்கு ஏற்ற கேழ்வரகு சாகுபடி

குறுதானியப் பயிர்களில் மிக முக்கியமானது ராகி எனப்படும் கேழ்வரகு; மாவு, புரதம், தாது, வைட்டமின், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

பருவமழை அதிகமாகக் கிடைக்கக் கூடிய ஜூலை, ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டம், செப்டம்பர், அக்டோபர் வரையிலான புரட்டாசிப் பட்டத்தில் கேழ்வரகு பயிரிடலாம்.

 • தமிழகத்தில் 94 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரியாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 1.70 லட்சம் டன் கேழ்வரகு செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு சராசரியாக 1,887 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கிறது.
 • கேழ்வரகுக்கு ஏற்ற மண்வகை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் தென்மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவுக்கு பயிரிடப்படுகிறது.
 • இறவைப் பயிராக சித்திரை, ஆடி, மார்கழிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் கேழ்வரகு பயிரிடலாம். அனைத்து வகையான நிலமும் பயிரிட ஏற்றது.
 • செம்மண், இருமண் கலந்த நிலங்கள் கேழ்வரகு விளைச்சலுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.

ரகங்களும் சிறப்பியல்புகளும்:

 • வறட்சி மற்றும் நோயைத் தாங்கி வளரக்கூடிய பல ரகங்களை வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.
 • கோ 9 – ஹெக்டேருக்கு 4,500 கிலோ வரை சாகுபடி கிடைக்கக் கூடியது. தானியம் வெண்மை நிறத்தில் இருக்கும். மாவுத் தன்மை அதிகம் என்பதால் மதிப்பூட்டக் கூடிய பொருள்கள் தயாரிக்கலாம். இதில் அதிக புரதச்சத்து உள்ளது.
 • கோ 13 – ஹெக்டேருக்கு 3,500 கிலோ வரை கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
 • கோ (ரா) 14 – ஹெக்டேருக்கு 2,800 கிலோ வரை சாகுபடி செய்ய முடியும். அதிக புரதம், சுண்ணாம்புச் சத்து உடைய ரகமான இது, குலைநோயைத் தாங்கி வளரக்கூடியது.
 • கே 7 – ஹெக்டேருக்கு 3,000 கிலோ விளைச்சல் கிடைக்கும். மானாவாரி, இறவைக்கு ஏற்ற ரகம்.
 • டி.ஆர்.ஒய் 1 – ஹெக்டேருக்கு 4 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் பெற முடியும்; களர், உவர் நிலத்துக்கு ஏற்றது.
 • பையூர் 1 – ஹெக்டேருக்கு 3,125 கிலோ விளைச்சல் கிடைக்கும்; வறட்சியைத் தாங்கக்கூடியது; நீண்ட விரல் ரகம்; மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
 • பையூர் (ரா) 2 – ஹெக்டேருக்கு 3,150 கிலோ விளைச்சல் கிடைக்கக் கூடியது. சாயாத தன்மை, குலைநோய்க்கு எதிர்ப்பு தன்மையைக் கொண்டது இது.

இவ்வாறுவேளாண் பல்கலையின் சிறுதானியத்துறையைச் சேர்ந்த அ.நிர்மலகுமாரி, பெ.வீரபத்திரன் ஆகியோர் கூறினர்.
நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

அதிக விலை கிடைத்தும் கேழ்வரகு சாகுபடி புறக்கணிப்பு... :போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட், புரோட்டினெக்ஸ் ...
சவுக்கு பாத்தியில் ஊடுபயிராக கேழ்வரகு... காஞ்சிபுரம் வெங்கச்சேரி கிராம விவசாயி, சவுக்கு பாத...
கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்... விழுப்புரம் பகுதியில் கேழ்வரகு சாகுபடியில் விவசாயி...
கேழ்வரகு சாகுபடி செய்முறை கேழ்வரகை எந்த பருவத்திலும் பயிரிடலாம். எல்லா வகை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *