கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும்

கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும்

கோ.9

 • வயது 100 நாட்கள். தானிய மகசூல் 4500 கிலோ/எக்டர்.
 • தட்டை விளைச்சல் 7000கிலோ/எக்டர்.
 • தானியம் வெள்ளை, மதிப்பூட்டம் பெறுவதற்கு ஏற்றது. மாவாகும் தன்மை அதிகம்.
 • அதிக புரதச்சத்து கொண்டது.

கோ.13

 • வயது 105 நாட்கள்.
 • மகசூல் 3500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல்.10,000 கிலோ/எக்டர். வறட்சியைத் தாங்க வல்லது.
 • மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது.

கோ (ரா) 14

 • வயது 105-110 நாட்கள்.
 • மகசூல் 2774 கிலோ/எக்டர். தட்டை – 8428 கிலோ/எக்டர்.
 • அதிக புரதம், சுண்ணாம்பு சத்து உடையது. குலைநோய்க்கு சகிப்புத் தன்மை உடையது.
 • மானாவாரி இறவைக்கு ஏற்றது.

கே.7

 • வயது 95-100 நாட்கள்.
 • தானிய மகசூல் 3130 கிலோ/எக்டர். தட்டை – 5150 கிலோ/எக்டர்.
 • மானாவாரி, இறவைக்கு ஏற்றது.

டி.ஆர்.ஒய்.1

 • வயது 102 நாட்கள்.
 • மகசூல் 4011 கிலோ/ எக்டர். தட்டை மகசூல் 6800 கிலோ/எக்டர்.
 • களர், உவர் நிலத்திற்கு ஏற்றது.

பையூர்.1

 • வயது 115 நாட்கள்.
 • தானிய மகசூல் 3125 கிலோ/எக்டர். தட்டை – 5750 கிலோ.
 • வறட்சியைத் தாங்க வல்லது.
 • நீண்ட விரல் ரகம்.
 • மானாவாரி, இறவைக்கு ஏற்றது.

பையூர் (ரா) 2

 • வயது 115 நாட்கள்.
 • மகசூல் 3150 கிலோ/எக்டர். தட்டை – 6000-7000 கிலோ/எக்டர்.
 • சாயாத தன்மை.
 • குலைநோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்

Related Posts

மார்கழிப் பட்ட கேழ்வரகு பயிர்!... தமிழ்நாடு வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் தானிய வக...
மானாவாரி கேழ்வரகு சாகுபடி மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்கள...
கேழ்வரகு சாகுபடி செய்முறை கேழ்வரகை எந்த பருவத்திலும் பயிரிடலாம். எல்லா வகை...
நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்?... நெல் பயிருக்கு இணையாக கேள்வரகு பயிரிட்டு கூடுதல் ல...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *